கம்பாலா உசைன் போல்ட், கெளடாவின் ரெக்கார்டை ஓடவிட்ட வாலிபன்... 100 மீட்டரை 8.36 வினாடிகளில் கடந்து அசத்தல்!
பிஜே நிஷாந்த் ஷெட்டி என்பவர் 100 மீட்டார் தூரத்தை 8.36 வினாடிகளில் கடந்து கம்பாலாவின் உசைன் போல்ட் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
கம்பாலா என்பது கர்நாடகாவின் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்ட விவசாய சமூகத்தின் பாரம்பரிய ஆண்டு எருமை பந்தயமாகும். பந்தயத்தில் இரண்டு எருமை மாடுகள் கட்டப்பட்டு ஒரு சேறு நிறைந்த பகுதியில் வேகமாக ஓடவேண்டும். முதலில் யார் பந்தய தூரத்தை கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக கருதப்படும்.
இந்தநிலையில், நடந்த சனிக்கிழமை கர்நாடகா மாநிலம் தக்ஷிண கன்னடாவில் நடந்த போட்டியில் ஒரு ஜோடி எருமை மாடுகளுடன் பிஜே நிஷாந்த் ஷெட்டி என்பவர் 100 மீட்டார் தூரத்தை 8.36 வினாடிகளில் கடந்து கம்பாலாவின் உசைன் போல்ட் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
Yet another Usain Bolt emerged from Kambala !
— Vishweshwar Bhat (@VishweshwarBhat) February 18, 2020
Nishant Shetty broke the record of Srinivas Gowda. Shetty ran 143 meters distance in 13.61 seconds whereas Gowda took 13.62 seconds to cover 142.5 meters. pic.twitter.com/1BoX0hbmXO
கடந்த ஆண்டு கர்நாடகாவில் சத்ய தர்ம ஜோடுகெரே கம்பாலா, காகேபடவு என்ற இடத்தில் நடந்த போட்டியில் 8.78 வினாடிகளில் கவுடா கடந்ததே சாதனையாக இருந்தது. இதன் காரணமாகவே கவுடாவிற்கு கம்பாலாவின் உசைன் போல்ட் என்ற பட்டம் கிடைத்தது. தற்போது அந்த சாதனையை நிஷாந்த் ஷெட்டி தன்வசமாகியுள்ளார்.
30 வயதான நிஷாந்த் ஷெட்டி, வேனூர் பரமுடா சூர்ய சந்திர ஜோடுகெரே கம்பாலாவில் நடந்த காலிறுதி பந்தயத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் நிஷாந்த் ஷெட்டி 125 மீட்டர் தூரத்தை 10.44 வினாடிகளில் கடந்தார். கம்பாலா நிகழ்ச்சியில் பந்தய தடங்கள் வெவ்வேறு நீளம் கொண்டவை என்றாலும் 100 மீட்டர் தூரத்தை கடக்க எடுத்த நேரமே சாதனைக்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்