![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ !
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
![Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ ! IPL 2022: CSK and RCB players meeting during practice video goes viral in twitter Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/12/e29c8ff51d0dc26ad67276b11903e705_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் வீரர்களுடன் பயிற்சியின் போது டூபிளசிஸ், கோலி உள்ளிட்ட பெங்களூரு வீரர்கள் சந்தித்தனர். இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
👋way Catchups - Chennai & Bangalore!#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/VByLD91W4m
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2022
ஐபிஎல் தொடரில் தற்போதுவரை சென்னை-பெங்களூரு அணிகள் 28 முறை மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 18 முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 5 ஐபிஎல் போட்டிகளில் 3 முறை சென்னையும், 2 முறை பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. ஆகவே பலம் வாய்ந்த பெங்களூரு அணியை இம்முறை தடுமாறி வரும் சென்னை அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கடந்த சீசன் வரை சென்னை அணியிலிருந்த டூபிளசிஸ் இம்முறை பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடுகிறார். எனவே அவர் சென்னை அணிக்கு எதிராக எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரஸல் டூ ஹர்திக் - ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)