CWG 2022 : ஜூடோவில் தங்கம் வாங்குமா இந்தியா? இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சுஷீலாதேவி..
CWG 2022 : காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சுஷிலாதேவி 48 கிலோ ஜூடோ போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மகளிர் பிரிவில் 48 கிலோ பிரிவில் களமிறங்கிய சுஷிலாதேவி லிக்மாபம் மலாய் வீராங்கனையான போன்பேசை தன்னுடைய திறமையான ஆட்டத்தால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
A chance to win GOLD medal later tonight folks!
— India_AllSports (@India_AllSports) August 1, 2022
Judoka Sushila Devi Likmabam storms into FINAL (48kg) with win over Mauritius's Priscilla Morand .
👉 Gold medal bout later tonight at 2145 hrs IST. #CWG2022 #CWG2022India pic.twitter.com/L71NPWPEiu
அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுஷிலாதேவி மொரிஷியஸ் நாட்டு வீராங்கனையான பிரிசில்லாவுடன் மோதினர். இந்த போட்டியில் அவருக்கு எதிரணி வீராங்கனை கடும் நெருக்கடி அளித்தார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை வீழ்த்தினார். இதன்மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
சுஷிலாதேவி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதன் மூலம் இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
CWG | Judo Update: India will be in contention for for 4 medals later tonight: 1 Gold medal bout & 3 Bronze medal bouts.
— India_AllSports (@India_AllSports) August 1, 2022
Live from 2130 hrs IST onwards tonight | Sony Sports network #CWG2022India pic.twitter.com/5k4cpdoeOH
தங்கத்தை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்வதற்கான இறுதிப்போட்டியில் அவர் தென்னாப்பிரிக்காவின் ஒயிட்போயிடன் இன்று இரவு 9.30 மணிக்கு மோதுகிறார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு இன்னொரு தங்கப்பதக்கம் கிட்டும். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சுஷிலாதேவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Mens Hockey IND vs ENG: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? இங்கிலாந்துடன் இன்று மோதல்..!
மேலும் படிக்க : IND vs WI, 2nd T20I: லக்கேஜால் தாமதமான இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி...! இதெல்லாம் ஒரு காரணமா..? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்