MI vs RCB, 1 Innings Highlights: நொறுங்கிய மும்பை பந்து வீச்சு.. வாணவேடிக்கை காட்டிய பெங்களூரு... 200 ரன்கள் இலக்கு..!
IPL 2023, Match 54, MI vs RCB: வேகப்பந்து வீச்சாளார்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று இல்லாமல் அனைவரது பந்துகளிலும் வானவேடிக்கை காட்டினர்.
ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலியும் பெங்களூரு அணியின் கேப்டனுமான டூ பிளசிஸும் தொடங்கினர். மும்பை அணிக்கு எதிராக ருத்ரதாண்டவமாடிய விராட் கோலி இந்த போட்டியில் ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். போட்டியின் முதல் ஓவரில் பெஹரண்டார்ஃப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழக்க, மூன்றாவது விக்கெட்டுக்கு இறங்கிய ராவத்தும் தனது விக்கெட்டை மூன்றாவது ஒவரில் இழக்க போட்டியில் மும்பை அணியின் கை ஓங்கியது.
ஆனால் அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆட பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 56 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேவிற்கு பிறகும் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். குறிப்பாக ஆர்ச்சருக்கு பதிலாக மும்பை அணியில் சேர்க்கப்பட்ட ஜார்டனின் முதல் ஓவரில் டூபிளஸி சிக்ஸர்கள் விளாசி அதகளப்படுத்தினார். இதனால் இவர்கள் இருவரது கூட்டணியில் 25 பந்தில் அரைசதம் சேர்த்தனர். அதேபோல் நெருக்கடியான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 25 பந்தில் 50 ரன்கள் விளாசினார்.
இவர்களது கூட்டணியினை மும்பை அணி பந்து வீச்சாளர்கள் பிரிக்க முடியாமல் திணறினர். 10 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்களில் இருந்தது. அதன் பின்னரும் இருவரும் சராமாரியாக பவுண்டரிகள் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த டூ பிளசிஸ் 30 பந்தில் தனது அரைசத்தினை எட்டினார். இருவரும் அரைசதம் கடந்து விட்டதால், மேலும் மும்பை பந்து வீச்சை சிதைத்தனர். இதனால் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை எட்டியது பெங்களூரு. வேகப்பந்து வீச்சாளார்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று இல்லாமல் அனைவரது பந்துகளிலும் வானவேடிக்கை காட்டினர்.
நிம்மதி பெருமூச்சு விட்ட மும்பை
இவர்களது கூட்டணியை 13வது ஓவரினை வீச வந்த பெஹரண்டார்ஃப் பிரித்தார். ஸ்லாட்டில் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்த மேக்ஸ் வெல் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட லோம்ரோர் ஒரு ரன் மட்டும் சேர்த்த நிலையில் கார்த்திகேயா பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் க்ரீன் பந்து வீச்சில் டூ பிளசிஸ் தனது விக்கெட்டை இழக்க போட்டி மீண்டும் மும்பை கரங்களுக்கு வந்தது என அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அதன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக்கும் கேதர் ஜாதவ் இரண்டு ஓவர்கள் நிதானமாக ஆட, டெத் ஓவர்களில் (16வது ஓவர் முதல்) அடித்து ஆட ஆரம்பித்தனர். இது மும்பை அணிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆனால் தினேஷ் கார்த்திக்கும் 19வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் சேர்த்தது.