KKR vs GT: வீசியது ஒரே ஓவர்.. மாஸாக ஐபிஎல் சாதனை பட்டியலில் இணைந்த ரஸல்.. !
ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவர் வீசி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஸல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டனஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மட்டும் அரைசதம் கடந்து அசத்தினார். மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் குஜராத் அணியின் பேட்டிங்கின் போது கடைசி ஓவரை கொல்கத்தா வீரர் ரஸல் வீசினார். அவர் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். அடுத்த இரண்டு பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் ஒரு ரன் விட்டுக் கொடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் மொத்த போட்டியில் ஒரே ஓவர் வீசி அதிகமாக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Picking wickets 4 fun!#KKRHaiTaiyaar #KKRvGT #IPL2022 #AndreRussell pic.twitter.com/FL9O2YBqiQ
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2022
இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் லக்ஷ்மி ரத்தன் சுக்லா 0.5 ஓவர்கள் வீசி 6 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அவர் 2008ஆம் ஆண்டு கொல்கத்தா- டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் இதை செய்திருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்ரேயஸ் கோபால் 2019ஆண்டு ராஜஸ்தான் அணி சார்பில் ஒரே ஓவர் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவர் வீசி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
ஆண்ட்ரே ரஸல் 1 ஓவர்- 4/5(2022)
லக்ஷ்மி ரத்தன் சுக்லா 0.5 ஓவர்- 3/6(2008)
ஸ்ரேயாஸ் கோபால் 1ஓவர்- 3/12(2019)
இந்த சாதனை பட்டியலில் தற்போது ஆண்ட்ரே ரஸல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்