IND Vs Eng 4th T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா இங்கிலாந்து? இன்று 4வது டி20 போட்டி..!
IND Vs Eng 4th T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

IND Vs Eng 4th T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி, புனேவில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வென்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பட்லர் தலைமையிலான அணி, தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இருப்பினும், தற்போதும் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான நன்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து 4வது டி20 போட்டி:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி, புனேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று தொடர் சமன் செய்ய இங்கிலாந்து அணியும் முனைப்பு காட்டுகிறது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. அவர்களும் பேட்டிங்கில் தங்களது திறனை வெளிப்படுத்தினால், அணியின் பலம் கூடும். பந்துவீச்சை பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் எதிரணியை திணறடிக்கின்றனர். அதேநேரம், ஷமிக்காக நல்ல ஃபார்மில் இருந்த அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியில், பிளேயிங் லெவனில் இல்லாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
புனே மைதானம் எப்படி?
முதல் மூன்று போட்டிகளும் ஸ்லோ பிட்ச்களில் நடைபெற, நான்காவது போட்டி அதிரடி பேட்டிங்கிற்கு சாதகமான புனே மைதனாத்தில் நடைபெற உள்ளது. இந்த களத்தில் விக்கெட்டுகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம், பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் களம் சாதகமாக இருக்கும்.
உத்தேச பிளேயிங் லெவன்
இந்தியா: சஞ்சு சாம்சன் (வி.கீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித் (வி.கீ), ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், அடில் ரஷித்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

