மேலும் அறிய

Union Budget 2025: இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - 16 மசோதாக்கள், யாருக்கு தாக்கம்? நல்ல சேதி இருக்கா?

Union Budget 2025: மத்திய அரசின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Union Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  மக்களவையில் நடைபெற உள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனித்தனியாக தாக்கல் செய்வார். சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 

முதல்கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி வணிகம் தவிர, 16 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.  தொடர்ந்து இரண்டாவது கட்டமாக , பட்ஜெட் முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக மார்ச் 10ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். 

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

முன்னதாக நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள், அரசு, நாடாளுமன்ற குழுக்களை அரசியல் ஆக்குவதாகவும், பெரும்பான்மையை பயன்படுத்தி, தன் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டின. அதோடு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறு மஹா கும்ப மேளாவை தவறாக நிர்வகித்தததன் காரணமாகவே, கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருவதால்,  ஜனவரி 31ஆம் தேதியன்று நாடாளுமன்ற கூட்டத்தில் விவாத அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமர்பிக்கப்பட உள்ள 16 மசோதாக்கள்:

பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள 16 மசோதாக்களில் வக்ஃப் (திருத்தம்) மசோதா, வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, ரயில்வே (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, விமானப் பொருள்கள் மசோதா மற்றும் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மீதான நலன்களைப் பாதுகாக்கும் மசோதா ஆகியவை அடங்கும்.  16 மசோதாக்கள் தவிர, பட்ஜெட் அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் நிதி வணிகம் பின்வருமாறு:

  • 2025-26 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் இரண்டாம் மற்றும் இறுதித் தொகுதி மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான அதிகப்படியான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi On Modi And Adani | அதானி குறித்த கேள்வி”இது பர்சனல் மேட்டரா மோடி” கோபமான ராகுல் | BJPNEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Embed widget