ஈசிஆரில் இரவில் இளம்பெண்களை காரில் துரத்திய கும்பல்: வீடியோவை வைத்து 5 பேரை தூக்கிய போலீஸ்
பெண்களை துரத்தி வந்த இளைஞர்களின் காரில் கருப்பு சிவப்பு திமுக கொடி பறந்தது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை விரட்டியதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் தேதி ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை இரண்டு காரில் வந்த இளைஞர்கள் துரத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தன.
மேலும் பெண்களை துரத்தி வந்த இளைஞர்களின் காரில் கருப்பு சிவப்பு திமுக கொடி பறந்தது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
பெண்கள் காரில் இருந்த ஒரு பெண் இவை அனைத்தையும் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியானதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மை நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
மேலும் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அதனடிப்படையில் விரட்டிய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று இரவு கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் என போலீசார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். 7 பேர் கொண்ட கும்பல் பெண்களை காரில் துரத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

