Watch Video: பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் மரணம் - மஸ்கட்டில் இந்தியருக்கு சோகம்...!
பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஹார்ட் அட்டாக் என்பது மாறி, கார்டியாக் அரஸ்ட் என்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் விளையாட்டு அரங்கத்திலே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேட்மிண்டன் விளையாடிய நபர்:
கடந்த ஜனவரி 2-ந் தேதி மஸ்கட் நாட்டில் நண்பர்கள் சிலர் ஒன்றாக இணைந்து பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவரும் விளையாடிக் கொண்டிருந்தார். பேட்மிண்டன் அரங்கத்தில் நான்கு பேரும் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
2 Jan 2023 : Indian-origin man dies of 💔 attack💉 while playing on court in Muscat#heartattack2023 #heartattack #cardiacarrest #Myocarditis #ClotShotStrikesAgain pic.twitter.com/m96z2bYcAg
— Anand Panna (@AnandPanna1) January 10, 2023
நல்ல ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த இந்தியர், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோதே சட்டென்று சறுக்கி கீழே விழுந்தார். சறுக்கிதான் விழுந்தார் என்று அவரை அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர் எழுப்ப முயற்சித்தபோது, அவர் பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளார். இதனால், பதற்றமடைந்த நண்பர்கள் அவரை பரிசோதித்தனர். பின்னர்தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
கார்டியாக் அரெஸ்ட்:
அவரது இறப்பிற்கு கார்டியாக் அரஸ்ட்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த இந்தியரின் பெயர் குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நமது நாட்டில் உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வேலைகள், தூங்கும் முறை என்பது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துவிட்டதால் மக்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் கவலைக்குரிய வகையில் மாறி வருகிறது. இதனால், உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி விவகாரங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Crime : மசாஜ் சென்டரில் அதிரடி ரெய்டு.. ஸ்பா என்னும் பெயரில் பாலியல் தொழில்.. தோண்ட தோண்ட பகீர் தகவல்கள்.. மீட்கப்பட்ட பெண்கள்..