Crime : மசாஜ் சென்டரில் அதிரடி ரெய்டு.. ஸ்பா என்னும் பெயரில் பாலியல் தொழில்.. தோண்ட தோண்ட பகீர் தகவல்கள்.. மீட்கப்பட்ட பெண்கள்..
மகாராஷ்டிராவில் பாலியல் தொழில் செய்வது வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்ரா மாநிலம் புனே நகரில் ஹிஞ்சேவாடி என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள ஒரு ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து அங்கு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.
புனே காவல்துறையினரில் ஒருவர் மஃப்டியில் தன்னை ஒரு கஸ்டமர்போல் நடித்து சம்பந்தப்பட்ட ஸ்பா சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சோதனையிட்டதில் பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மஃப்டியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் ஸ்பா சென்டர் உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.37,920 பணமும், 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அங்கு இருந்த நான்கு பெண்களையும் போலீசார் மீட்டனர். ஸ்பா உரிமையாளர் அஜித் சங்கர் கோசாவி (48), பாடா, மற்றும் ஸ்பா மேலாளர் சோனு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழில்கள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சொகுசு விடுதிகள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 593 பெண்களை மீட்டுள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 244 பெண்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் மீதியுள்ளவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
இதே மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 5 பேரை கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் சலுன்கே விஷார் என்ற பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்குள்ள ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
அதேபோல் ஸ்பா நடத்திய மேலாளர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி மண்டல், மகாராஷ்ராவைச் சேர்ந்த சுமித் ஹோகண்டே ஆகிய இருவரும், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று பாலியல் தொழில்கள் மகாராஷ்டிரா மட்டுமின்ற பல இடங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Earthquake : இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் 7.7 ஆக பதிவானது.. என்ன நடந்தது?