மேலும் அறிய

HBD RAshwin: இது தமிழனின் தனித்துவம்: இந்திய ஸ்பின் கிங் அஸ்வினின் டாப்-5 சுழல் மாயாஜால பெர்ஃபாமென்ஸ் !

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தன்னுடைய 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின் தான். சென்னையைச் சேர்ந்த அஸ்வின் 2010ல் ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். அதற்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னராக 10 ஆண்டுகளாக வலம் வருகிறார். 

இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 413 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அத்துடன் 111 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 150 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் 46 டி20 போட்டிகளில் பங்கேற்று 52 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ள அஸ்வின் இதுவரை 5 சதம் அடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 5ஆவது சதத்தை அடித்து அசத்தினார். இப்படி 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அஸ்வினின் சில சிறப்பான பந்துவீச்சுகள் என்னென்ன?

முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்:

ரவிச்சந்திரன் அஸ்வின் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். 

6/46 vs இலங்கை(2015):

இந்திய கிரிக்கெட் அணி 2015ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அதில் அஸ்வினின் சுழற்பந்துவீச்சில் திணறிய இலங்கை வீரர்கள் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். அஸ்வின் அந்த இன்னிங்ஸில் 46 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

HBD RAshwin: இது தமிழனின் தனித்துவம்: இந்திய ஸ்பின் கிங் அஸ்வினின் டாப்-5 சுழல் மாயாஜால பெர்ஃபாமென்ஸ் !

4/113 vs தென்னாப்பிரிக்கா(2018):

அஸ்வின் மீது எப்போதும் வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீசிவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே வருகிறது. ஆனால் அவர் ஒவ்வொரு வெளிநாடு தொடர்களிலும் நிறையே விஷயங்களை கற்று அடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்கு ஒரு சான்று இந்த 2018 தென்னாப்பிரிக்க தொடர். 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடரில் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அந்த தொடர் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனினும் அதிலும் அஸ்வின் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார். 

4/64vs இங்கிலாந்து(2018):

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடரை போல் இங்கிலாந்து தொடரிலும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் கூக், பட்லர்,ஸ்டோக்ஸ்,பிராட் ஆகிய நான்கு பேரை அவுட்டாக்கி அசத்தினார். அத்துடன் அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 64 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் 59 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

HBD RAshwin: இது தமிழனின் தனித்துவம்: இந்திய ஸ்பின் கிங் அஸ்வினின் டாப்-5 சுழல் மாயாஜால பெர்ஃபாமென்ஸ் !

3/57vs ஆஸ்திரேலியா(2018):

2018ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. அந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 52 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களை தன்னுடைய சுழலால் ஆட்டமிழக்க செய்தார். அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். 

இப்படி பல்வேறு முறை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ள அஸ்வின் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்த அனுபவத்தை அவர் டி20 போட்டியிலும் காட்டி இந்தியாவிற்கு இரண்டாவது டி20 உலகக் கோப்பை பெற்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே அவருடைய 35ஆவது பிறந்தநாளுக்கு சிறந்த பரிசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:"இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து விராட் கோலி" - சவ்ரவ் கங்குலி புகழாரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget