IND Vs AUS, Innings Highlights: தன்னந்தனியாய் மிரட்டிய மேக்ஸ்வெல்: கடைசி வரை போராடி தோற்ற இந்தியா! ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று (நவம்பர் 28) அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி , இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினார்கள். 6 பந்துகள் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி மட்டும் அடித்தார்.
பின்னர் 6 ரன்களில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். பின்னர் வந்த இஷான் கிஷன் ரன் ஏதும் இன்றி பெவிலியன் திரும்ப அடுத்து வந்த சூர்ய குமார் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் நிதனமாக விளையாடினர். பின்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, 52 பந்திகளில் சதம் அடித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டார். அதன்படி, மொத்தம் 13 பவுண்டரிகளையும், 7 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார்.
முன்னதாக, கடைசி 13 பந்துகளில் 6 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகள் என மொத்தம் 52 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி 20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ். அதேபோல், திலம் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களை குவித்தார். இவ்வறாக இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 222 ரன்கள் குவித்தது.
223 ரன்கள் இலக்கு:
பின்னர், 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்தார். மறுபுறம் 16 ரன்கள் எடுத்து அர்தீப் சிங் பந்தில் விக்கெட்டானார். பின்னர் வந்த ஜோஸ் இங்கிலிஸ் டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார். இதனிடையே அவர் ஆவிஸ் கான் பந்தில் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து ஜோஸ் இங்கிலிஸும் விக்கெட்டை பறிகொடுக்க 68 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. பின்னர் , வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். அதேநேரம் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்:
கடைசி வரை களத்தில் நின்ற ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலபுறமும் பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலியா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது.