இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் விவிஎஸ் லக்ஷ்மண்: காரணம் இதுதான்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்ஷ்மண் விரைவில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருக்கிறாரே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்ஷ்மண் விரைவில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருக்கிறாரே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இதுதான் காரணம்:
தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்தப் போட்டி முடிவுக்கு வருகிறது. அதன்பின்னர் தென் ஆப்ரிக்கா அணியுடன் இந்திய அணி டி20 தொடர் ஒன்றை எதிர்கொள்கிறது. அதுமட்டுமல்லாது அயர்லாந்து அணியுடனும் 26 ஜூனில் தொடங்கி ஒரு சிறிய தொடரில் விளையாடுகிறது. இந்த இரு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ள வீரர்களின் தேர்வு தற்போது பிசிசிஐயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து ஐபிஎல் தொடரில் சாதனை படைத்துவரும் இளம் வீரர்களை தேர்வு செய்ய அதிகம் ஆர்வம் காட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து, இலங்கை என இரு இடங்களில் போட்டி நடந்தபோது இந்தியா இதுபோலவே இரண்டு அணிகளை தயார் செய்து அனுப்பியது. அதே மரபை பின்பற்றி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.
முதலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா டி20 தொடர் ஜூன் 17 வரை நடைபெறுகிறது. இதில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. அடுத்து ஜூன் 26 தொடங்கி 28 வரையில் அயர்லாந்து அணியுடன் ஒரு தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த இரு தொடர்களில் இருந்தும் விலகியுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சுற்றுப்பயணத்தில் தான் பங்கேற்க வேண்டும் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தான் தென் ஆப்ரிக்கா மற்றும் அயர்லாந்து நாடுகளில் நடைபெறும் இரண்டு தொடர்களுக்கும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார்.
விவிஎஸ் லக்ஷ்மண் தர்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். தொடர்ந்து பயிற்சியளித்து வீரர்களை தயார் செய்யும் பணியில் லக்ஷ்மண் இருப்பதால், அவரை இந்தத் தொடர்களுக்குப் பயிற்சியாளராக நியமியப்பது சரியாக இருக்கும் என்று கருதி இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் விவிஎஸ் லக்ஷ்மண், இந்த ஆண்டு தொடக்கத்தில் அண்டர் 19 அணி உலகக் கோப்பையை வெல்ல சிறப்பான பயிற்சியை அளித்து வித்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இரு வெவ்வேறு போட்டிகளை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், அதுவும் விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பந்த், ரோகித் சர்மா என முன்னணி வீரர்களுக்கு எல்லாம் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் யார் கேப்டனாவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கேப்டன்சி போட்டாபோட்டியில் ஹர்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவான் வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.