Srikanth: இவர கேப்டனாக போடுங்க; அப்பதான் டீம் உருப்புடும்; யாரைச் சொல்கிறார் ஸ்ரீகாந்த்..?
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் டி20 அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Srikanth: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் டி20 அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சமீபகாலமாகவே பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. அதிலும் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை போட்டியை வென்ற பின்னர் ஒரு சர்வதேச போட்டியில் கூட இந்திய அணி தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட பின்னர் தான் இந்திய அணி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. அதிலும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்ட பின்னரும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.
விராட் கோலியின் பார்ம் அவுட் அவரை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவைத்தது. அதன் பின்னர் அணியின் முழுநேர கேப்டனாக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டார். ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்திய அணி டி20 ஆசிய கோப்பை போட்டித் தொடரிலும் மற்றும் டி20 உலககோப்பை போட்டியிலும் பங்கேற்றது. அதில் இரண்டிலும் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீ காந்த் ஆகியோர் அணியை விமர்சித்து கருத்துக்கள் கூறி வருகின்றனர். அதில் கவாஸ்கர் மறைமுகமாக ஒருசிலர் அணியில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என கூறியுள்ளார்.
View this post on Instagram
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவரான ஸ்ரீ காந்த் நேரடியாகவே டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டராகவும் மிடில் ஆர்டரில் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் உள்ள ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்திய அணியின் 20 ஓவர் போட்டிகளுக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க வேண்டும். நான் மட்டும் தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க வேண்டும் என நேரடியாக கூறியிருப்பேன். 2024 ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டிக்கு நாம் இப்போது இருந்தே தயார் ஆக வேண்டும். உலககோப்பை போட்டிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அணியை தயார் படுத்த வேண்டும். அணிக்கு அதிகமான வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் தேவை. 1983, 2007,2011 உலக கோப்பையை வெல்லும் போது அணியில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருந்தனர். அதனால் தான் நாம் வெற்றி பெற்றோம். இத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண்பது முக்கியம் என அவர் கூறியுள்ளார்.