Sanju Samson: பிளேயிங் XI-ல் இடமில்லை முதல் 'தொடர் நாயகன்' வரை! இது தான் கம்பேக்.. சஞ்சுவின் அசாத்திய பயணம்!
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்தது, தொடக்க ஆட்டங்களில் விளையாடாத அவர், சூப்பர் 8 சுற்றில் களமிறங்கியது முதல் பல உலக சாதனைகளைத் உடைத்து விளாசியுள்ளார் சஞ்சு சாம்சன்.
தழுவி போன வாய்ப்புகள்
டி20 உலகக்கோப்பையின் தொடக்கத்தில் யாராவது சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வெல்வாரா என்று கேட்டு இருந்தால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லி இருப்போம், பிளேயிங் XI-கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் தான் இருந்தார் சஞ்சு சாம்சன்.
இது தான் கம்பேக்:
குரூப் சுற்றில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக ஒரு போட்டியில் களமிறங்கினாலும் அந்த போட்டியில் சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சீக்கிரம் ஆட்டமிழந்தாலும் அணியை தொடக்கத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் வெற்றி பெற்றால் தான அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கிற நிலையில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச்சென்றார். அதன் பின்னர் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 89 ரன்கள், இறுதிப்போட்டியில் 89 ரன்கள் என இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் கம்பேக் முக்கிய காரணமாக அமைந்தது.
சஞ்சு படைத்த சாதனைகள்
இந்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் படைத்த மற்றும் முறியடித்த சாதனைகளின் பட்டியலை காண்போம்.
1. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 89 ரன்கள் (46 பந்துகள்) விளாசியதன் மூலம், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.சஞ்சு சாம்சன்: 89 ரன்கள் (2026)மார்லன் சாமுவேல்ஸ்: 85* ரன்கள் (2016)
2. ஒரே தொடரில் அதிக ரன்கள் (இந்தியா)
இந்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (319 ரன்கள், 2014) சாதனையை முறியடித்துள்ளார்.
3. அதிக சிக்ஸர்கள் (இந்தியா)
ஒரே டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்துள்ளார். இத்தொடரில் அவர் மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார் (முந்தைய சாதனை: ரோகித் சர்மா - 15 சிக்ஸர்கள்)
.4. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதம்
டி20 உலகக்கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு முக்கிய நாக்-அவுட் போட்டிகளிலும் அரைசதம் அடித்த உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றார் (ஷாகித் அப்ரிடி மற்றும் விராட் கோலிக்கு பிறகு).
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





















