Ranji Trophy 2025 : இனி ரோகித் Comeback இல்ல.. Go back தான்! ரஞ்சியிலும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்..
Rohit sharma : ரஞ்சி கிரிக்கெட் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி எப்படியாவது பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ரோகித் சர்மா:
ரஞ்சிக்கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் பல இந்திய வீரர்கள் பிசிசிஐ புதிய விதியின் பொருட்டு தங்கள் சொந்த உள்ளூர் அணிக்காக களமிறங்கினர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று களமிறங்கினார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.
@itsmihir412 pic.twitter.com/PXawxTr7Wi
— stuud (@stuud18) January 23, 2025
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இழந்த ஃபார்மை மீட்க ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கினார். ஆனால் 19 பந்துகளை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உமர் நசீர் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க:Champions Trophy 2025 : ரெய்டு விட்ட ஐசிசி.. பணிந்து போன பிசிசிஐ! முடிவுக்கு வந்த பாகிஸ்தான் லோகோ விவகாரம்?
சொதப்பிய இந்திய டாப் ஆர்டர் :
மற்றொரு இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 11 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்து ஆட்டமிழந்தார்
INDIAN INTERNATIONAL BATTERS IN RANJI TROPHY:
— Johns. (@CricCrazyJohns) January 23, 2025
- Rishabh Pant dismissed for 1 run.
- Rohit Sharma dismissed for 3 runs.
- Yashasvi Jaiswal dismissed for 4 runs.
- Shubman Gill dismissed for 4 runs. pic.twitter.com/KoDYZ8ZIMo
பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய இந்திய ஒரு நாள் அணி துணைக்கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: Shreyas Iyer: கோடிகளில் ஏலம்.. ஆனா ”பொய்யா சொல்றாருப்பா”, ஸ்ரேயாஸ் அய்யரை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்
விராட் கோலி:
ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேசிய பணியில் இல்லாதபோது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கடந்த வாரம் புதிய விதியை கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்த போதிலும் ஃபார்ம் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி , ஜனவரி 30 முதல் ரயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஃபார்மை மீட்டு வரலாம் என்று களமிறங்கிய இந்திய நட்சத்திரங்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.





















