Champions Trophy 2025 : ரெய்டு விட்ட ஐசிசி.. பணிந்து போன பிசிசிஐ! முடிவுக்கு வந்த பாகிஸ்தான் லோகோ விவகாரம்?
Champions Trophy 2025 : இந்திய அணி தாங்கள் அணியும் ஜெர்சியில் வரும் லோகோவில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சிடப்போவதில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 :
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. பாதுகாப்பு குறைப்பாடு இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஹைபிரிட் மாடல் முறையில் போட்டிகள் தற்போது நடைப்பெற உள்ளது. அதன் படி இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைப்பெற உள்ளது.
இதையும் படிங்க: Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா முதல் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.
லோகோவில் பாகிஸ்தான் பெயர்:
இந்த நிலையில் இந்திய அணி தாங்கள் அணியும் ஜெர்சியில் வரும் லோகோவில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சிடப்போவதில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
சாம்பியன்ஸ் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ சின்னம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) உத்தரவுகளை இந்திய அணி கடைபிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வாரியம் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரைப் பதிக்க மறுத்துவிட்டதாக வந்த செய்திகளுக்கு மத்தியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் தேவஜித் சைகியா, சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரப்பூர்வ சின்னத்தில் அணி ஐசிசி வழிகாட்டுதல்களைப் பிசிசிஐ பின்பற்றும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரோகித் பாக். பயணம்?
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடைப்பெறும் கேப்டன்கள் அறிமுக விழாவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கலந்துக்கொள்வாரா என்பது குறித்து இது வரை முடிவு செய்யவில்லை என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 THE BCCI AGREES TO HAVE PAKISTAN ON CT JERSEY. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 22, 2025
- BCCI Secretary confirms the BCCI will follow every uniform related ICC rule during the Champions Trophy. (PTI). pic.twitter.com/X2Yx9RrhTW
பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களான துபாய், கராச்சி மற்றும் லாகூர் மற்ற அணிக்ள் விளையாடும் போட்டிகள் நடைப்பெறும். துபாயில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது, இருப்பினும், இந்திய அணிப் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றால், துபாயில்இறுதிப் போட்டி நடைபெறும். அப்படி இல்லை என்றால் இறுதிப் போட்டி லாகூரில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















