உலகக்கோப்பை லீக் போட்டிகளில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் செயல்படுகள் என்ன? விவரம் இதோ!
இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவின் படி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பற்றியும் அவர்கள் எடுத்த விக்கெட்டுகள் தொடர்பான தகவல்களையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஐசிசி உலக்க கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று நாளை (நவம்பர் 15) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளின் முடிவின் படி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். மேலும், இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவின் படி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பற்றியும் அவர்கள் எடுத்த விக்கெட்டுகள் தொடர்பான தகவல்களையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஜஸ்பிரித் பும்ரா:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள அவர்437 பந்துகள் வீசியுள்ளார். 72.5 ஓவர்கள் வீசியுள்ள பும்ரா 6 ஓவர்கள் மெய்டன் செய்துள்ளார்.
எதிரணிக்கு மொத்தமாக 266 ரன்களை கொடுத்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில், அதிகபட்சமாக 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
முகமது ஷமி:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மொத்தம் 5 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில், 192 பந்துகள் வீசியுள்ளார். 32 ஓவர்கள் வீசியுள்ள ஷமி 3 ஓவர்கள் மெய்டன் செய்துள்ளார். எதிரணிக்கு மொத்தமாக 153 ரன்களை கொடுத்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில், அதிகபட்சமாக 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில், 441பந்துகள் வீசியுள்ளார். 73.3 ஓவர்கள் வீசியுள்ள ஜடேஜா 4 ஓவர்கள் மெய்டன் செய்துள்ளார். எதிரணிக்கு மொத்தமாக 292 ரன்களை கொடுத்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில், அதிகபட்சமாக 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
குல்தீப் யாதவ்:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதாவ் மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில், 451பந்துகள் வீசியுள்ளார். 75.1 ஓவர்கள் வீசியுள்ள குல்தீப் 2 ஓவர்கள் மெய்டன் செய்துள்ளார். எதிரணிக்கு மொத்தமாக 312 ரன்களை கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில், அதிகபட்சமாக 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
முகமது சிராஜ்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 9 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில், 399பந்துகள் வீசியுள்ளார். 66.3 ஓவர்கள் வீசியுள்ள சிராஜ் 6 ஓவர்கள் மெய்டன் செய்துள்ளார். எதிரணிக்கு மொத்தமாக 346 ரன்களை கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில், அதிகபட்சமாக 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.