IND vs WI 4th T20 : தொடரை வெல்லுமா இந்தியா...? வெற்றிபெறுமா வெஸ்ட் இண்டீஸ்? வெல்லப்போவது யார்..?
IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி இன்று அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மோதுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஆடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறறது.
இந்த நிலையில், தொடரின் நான்காவது டி20 போட்டி இன்று புளோரிடாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அதேசமயத்தில், தொடர் தங்கள் கையை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் வெஸ்ட் இண்டீஸ் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
Getting into the groove, be like! 👌 👌#TeamIndia gear up for the 4⃣th #WIvIND T20I! 👍 👍 pic.twitter.com/05CXwnbhay
— BCCI (@BCCI) August 6, 2022
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மிகவும் பலமானதாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் போட்டி நடைபெறுவதால் இந்த போட்டியில் ரன்மழை பொழிய வாய்ப்புள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இன்றும் மிரட்டுவாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியம். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கினால் வெஸ்ட் இண்டீசுக்கு நிச்சயம் நெருக்கடி ஆகும். கடைசி கட்ட பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி அசத்தினால் கண்டிப்பாக இந்தியா இமாலய இலக்கை குவிக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் அதிரடியான தொடக்கம் அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் பூரண் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. ரோவ்மென் பவெல், ஹெட்மெயர் அதிரடி காட்டினால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய ரன்களை குவிக்கும்.
இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ்குமார், ஆவேஷ்கான் சிக்கனமாக வீச வேண்டியது அவசியம். ஹர்திக் பாண்ட்யா கடந்த போட்டியில் அசத்தியது போலவே இன்றும் அசத்த வேண்டியது அவசியம். அர்ஷ்தீப் சிங்கும் சிக்கனமாக வீச வேண்டியது அவசியம். சுழலில் அஸ்வின் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இந்த போட்டியில் கட்டுக்கோப்பாக வீசினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெற முடியும். ப்ளோரிடாவில் நடைபெறும் இன்றைய போட்டி இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டி டிடி ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்