Ind vs Aus Test : ஆரம்பமே வெற்றி.. பெர்த் டெஸ்டில் டாஸ் ஜெயித்து இந்திய அணி முதலில் பேட்டிங்!
Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் அணி போட்டியில் இந்திய அணி பேட்டிஙகை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீன்னி அறிமுகமாகவுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. 2018-19 மற்றும் 2020-21 சுற்றுப்பயணங்களில் அடுதடுத்து இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி நிச்சயம் போராடும் என்பது ரசிகர்களிம் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இருப்பினும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த பத்து ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் இழந்த ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் முனைப்பில் உள்ளது.
மைதானம் எப்படி?
இன்று போட்டி நடக்கும் பெர்த் ஆப்டஸ் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி இது வரை அந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்திய அணி இந்த மைதானத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி விளையாடியது. அந்த போட்டியில் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மேலும் இந்த மைதானத்தில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் விராட் கோலி தான்.
அணி விவரம்:
இந்தியா:
ஜஸ்பிரித் பும்ரா ( கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் , விராட் கோலி, ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் , நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்),நாதன் மெக்ஸ்வீன்னி,அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசேன், நாதன் லயன், மிட்ச் மார்ஷ், மிட்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித்.
இதையும் படிங்க: Dinesh Karthik : சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்கெட்ச்..கட்டம் கட்டும் ஆர்சிபி..DK-வின் மாஸ்டர் பிளான்..
வானிலை நிலவரம்:
பெர்த்தில் போட்டி நடைப்பெறும் ஐந்து நாட்களும் 20% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டி மழையால் தாமதமாக வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி நேரம் (IST):
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலை 7:50 மணிக்கு தொடங்குகிறது, டாஸ் காலை 7:20 மணிக்கு போடப்படும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டிக்கான அமர்வுகள் (sessions)பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன:
முதல் அமர்வு: காலை 7:50 முதல் 9:50 வரை
மதிய உணவு இடைவேளை: காலை 9:50 முதல் 10:30 வரை
இரண்டாவது அமர்வு: காலை 10:30 முதல் மதியம் 12:30 வரை
தேநீர் இடைவேளை: மதியம் 12:30 முதல் 12:50 மணி வரை
இறுதி அமர்வு: மதியம் 12:50 முதல் பிற்பகல் 2:50 வரை
நேரலையை எங்கு பார்க்கலாம்:
பெர்த்தில் நடைபெறும் IND vs AUS முதல் டெஸ்ட் போட்டி Disney+Hotstar செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.