மேலும் அறிய

Stuart Broad : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்.. மெக்ராத்தை முந்தி ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை...! டாப் 5-இல் அசத்தல்..

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவின் மெக்ராத்தை விட அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் பந்துவீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் இந்த மாபெரும் சாதனையை பிராட் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் பிராட் 13 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டனாக வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மெக்ராத்தை பின்னுக்குத் தள்ளி சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


Stuart Broad : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்.. மெக்ராத்தை முந்தி ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை...! டாப் 5-இல் அசத்தல்..

36 வயதான ஸ்டூவர்ட் பிராட் 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 566 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 121 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும். 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பிராட் அறிமுகமாகியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 667 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

6வது இடத்தில் மெக்ராத்தும், 7வது இடத்தில் வால்ஷூம், 8வது இடத்தில் அஸ்வினும், 9வது இடத்தில்  டேல் ஸ்டெயினும், 10வது இடத்தில் நாதன் லயனும் உள்ளனர். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார். 

மேலும் படிக்க : Watch Video: இலங்கை தேசிய கொடியுடன் மைதானத்தில் நின்ற கம்பீர்..! சூப்பர்ஸ்டார் அணி என புகழாரம்..!

மேலும் படிக்க : Watch Video: நீண்ட மாதங்களுக்கு பிறகு புன்னகை..! ஆசிய கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வீதிகளில் கொண்டாடித் தீர்த்த இலங்கை மக்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget