Major League Cricket: மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கும் சூப்பர் கிங்ஸ் வீரர்கள்... பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம்
Major League Cricket: பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களின் பட்டியல் இதோ.
மேஜர் லீக் கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் (எம்.எல்.சி) தொடரிலும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், எம் ஐ நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் என்ற பெயரில் அணிகள் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த போட்டிகளில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 2 போட்டிகளில் விளையாடிய சியாடல் ஓர்காஸ் இரண்டிலும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய எம் ஐ நியூ யார்க் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் தோல்லியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளிப் பட்டியல்
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளி | என்.ஆர்.ஆர் |
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
|
3 | 2 | 1 | 4 | +1.333 |
சியாடடில் ஓர்காஸ்
|
2 | 2 | 0 | 4 | +1.043 |
எம் ஐ நியூ யார்க்
|
3 | 1 | 2 | 2 | +1.100 |
வாஷிங்டன் ஃப்ரீடம்
|
2 | 1 | 1 | 2 | -0.014 |
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
|
2 | 1 | 1 | 2 | -0.325 |
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
|
2 | 0 | 2 | 0 | -4.350 |
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
மூன்று போட்டிகளில் விளையாடி 129 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வே.டிம் டேவிட்டும் மூன்று போடிகளில் விளையாடி 125 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 2 போட்டிகளில் விளையாடிய கோரி ஆண்டர்சன் 109 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்
மூன்று போட்டிகளில் விளையாடி 197.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ.டிம் டேவிட்டும் மூன்று போடிகளில் விளையாடி 183.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய மிட்செல் சான்ட்னர்152.17 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்
மூன்று போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார் முகமது மொஹ்சின். ட்ரெண்ட் போல்டும் மூன்று போடிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய காகிசோ ரபாடா 6 விக்கெட்டுகளை எடுத்து இடத்தில் உள்ளனர்.
பெஸ்ட் பௌலிங் எகானமி
மூன்று போட்டிகளில் விளையாடி 6.55 எகானமியுடன் முதல் இடத்தில் உள்ளார் முகமது மொஹ்சின். 7.09 எகானமியுடன் ட்ரெண்ட் போல்ட் இரண்டாம் இடத்திலும், பிராவோ 7.1 எகானமியுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.