மேலும் அறிய

Chris Cairns suffers paralysis: பக்கவாதத்தால் கால்கள் செயலிழப்பு...பரிதாப நிலையில் கிறிஸ் கெயின்ஸ்!

தனது மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸுக்கு இரண்டு கால்களும் செயலிழந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸ். 51வயதாகும் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் இதுவரை 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்றார். இந்திய சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெயின்ஸ் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. 2015ம் ஆண்டில் இவர் அந்தப் புகாரில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். 

Chris Cairns suffers paralysis: பக்கவாதத்தால் கால்கள் செயலிழப்பு...பரிதாப நிலையில் கிறிஸ் கெயின்ஸ்!
தனது மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதயத்திலிருந்து வயிற்றுப்பகுதிக்குச் செல்லும் ரத்த நாளம் கிழிந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது. அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உயிரைக் காப்பாற்ற இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தபோது முதுகுத் தண்டுவடத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கெயின்ஸின் இரண்டு கால்களும் செயலிழந்தது. இதனை அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து மீண்டு வரத் தற்போது முதுகுத்தண்டுவட சிறப்பு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Chris Cairns suffers paralysis: பக்கவாதத்தால் கால்கள் செயலிழப்பு...பரிதாப நிலையில் கிறிஸ் கெயின்ஸ்!

கெயின்ஸின் இதயத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் பெருந்தமணியின் உட்புறம் கிழிந்தது. பெருந்தமணி உடலின் மிக முக்கியமான ரத்த நாளம் என்பதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார் எனக் கூறப்பட்டது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் கவலைக்கிடமாக இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.  இதற்கிடையேதான் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது என்பது முடிவானது. நேற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு அவரது கால்கள் செயலிழந்தன. அவரது கால்களுக்குச் சிகிச்சை தர முதுகுத் தண்டுவட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கிறிஸ் கெயின்ஸுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தங்களது பிரைவசிக்கு மதிப்பளித்த நபர்களுக்கும் நன்றி என்றும் கெயின்ஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தனது 100வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த பவினா கடந்துவந்த பாதை !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget