Harbhajan Singh: ‛இடையூறுக்கு மன்னிக்கவும்...’ பாலத்தில் நின்று ஹர்பஜன் சிங் எம்.பி., போட்ட பதிவு!
கிரிக்கெட் வீரராக மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் செயல்படுபவர் ஹர்பஜன். அரசியலிலும் அவரது செயல்பாடு ஆக்ரோஷமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய ஆம் ஆத்மி கட்சியின் நியமன எம்.பி.,யுமான ஹர்பஜன் சிங், சமீபவத்தில் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றதை நாம் அனைவரும் அறிவோம். மைதானத்தில் வலம் வந்த ஹர்பஜன் சிங், முதன்முறையாக மக்கள் மன்றமான பாராளுமன்றத்தில் நுழைந்த போது அந்த தருணத்தை அவர் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர்.
உறுதிமொழி ஏற்று, எம்.பி.,யாக பொறுப்பேற்றதுமே, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டு விட்டார் ஹர்பஜன். மலைசார்ந்த பகுதியில் உயர்ந்த பகுதியில் பாலம் மீது அமர்ந்து பருவமழை காலத்தை ரசித்துக் கொண்டே தேநீர் அருந்தி, தனது மகிழ்வான அனுபவத்தை அவர் அப்போது பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் மறுநாளான இன்று மற்றொரு பதிவை அவர் செலுத்தியுள்ளார். அதில் கடல் நடுவே அமைக்கப்பட்ட நீண்ட பாலத்தின் நடுவே நின்று அவர் எடுத்துள்ள போட்டோவில், ‛உங்கள் பார்வைக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும்’ என்று குறிப்பிட்டு அவர் அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரராக மிகவும் ஆக்ரோஷமாக மைதானத்தில் செயல்படுபவர் ஹர்பஜன். அரசியலிலும் அவரது செயல்பாடு ஆக்ரோஷமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நேர அரசியலில் இறங்கும் முன், ஊர் சுற்றி வந்துவிடலாம் என்பதால் தான், ஹர்பஜன் தன்னை புத்துணர்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும், விரைவில் அதற்கான ஆயத்தத்தோடு களமிறங்குவார் என்றும் தெரிகிறது.
பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சியைப்பிடித்த ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து அங்கு தனது கட்சியை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த காலங்களில் பிரபலங்களை வைத்து தனது கட்சியை வளப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியின் அதே பாஃர்முலாவை தான், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் கையில் எடுத்துள்ளது. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்ததைப் போல, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை கையில் எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அக்கட்சியின் சார்பில் நியமன எம்.பி.,யாக ஹர்பஜன் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் இன்னும் இணையப் போகிறதாம் ஆம் ஆத்மி. ஆம் ஆத்மியின் இது போன்ற மூவ், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்