அயோத்தி கர்ப்பகிரகத்தில் வைக்கப்படும் 147 கிலோ எடை, 522 பக்கங்கள்; உம்முடி பங்காரு தயாரித்த தங்கப் புத்தகம்
147 கிலோ எடை கொண்ட இந்த புத்தகத்தில் 522 தங்க பட்டைகள் பதிக்கப்பட்ட பக்கங்கள் உள்ளது. ஒவ்வொரு பக்கமும் 700 கிராம் 24 கேரட் தங்கம் பயன்படுத்தப்பட்டு ஒரு மில்லி மீட்டர் தடிமன்னில் உருவாக்கப்பட்டுள்ளது.
147 கிலோ எடை 522 பக்கங்கள் கொண்ட அயோத்தி ராமர் கோயில் கற்பகிரகத்தில் வைக்கப்பட போகும் தங்கத்திலான ஸ்ரீ ராமச்சந்திரமனாஸ் புத்தகத்தை சென்னை உம்முடி பங்காரு ஜூவல்லர்ஸ் உருவாக்கியுள்ளனர்
அப்போது செங்கோல் இப்போது தங்கத்திலான ஸ்ரீ இராமச்சரிதமனாஸ் புத்தகம் தேசிய கவனம் இருக்கும் உம்முடி பங்காரு ஜுவல்லர்ஸ் சென்னை நுங்கம்பாக்கம் அமைந்துள்ள உம்முடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கத்திலான செங்கோலை செய்து நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட அயோத்தி பால ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக பக்தர் ஒருவர் ஆர்டர் செய்ததின் பெயரில் உம்முடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் ராமரின் வாழ்வியல் பற்றிய பாடல்கள் அடங்கிய ஸ்ரீ ராமச்சந்திரமானஸ் என்கிற புத்தகத்தை தங்கத்தில் வடிவமைத்துள்ளனர்.
ஸ்ரீ ராமச்சந்திரமானஸ் புத்தகத்தைப் பொறுத்தவரை பதினாறாம் நூற்றாண்டில் ராமர் பக்தர் துளசிதாசர் எழுதியது ஆகும். இதில் ராமரின் வாழ்வியல் பற்றிய பாலகாண்டம் முதல் உத்தர காண்டம் வரை உள்ள ஆறு காண்டங்கள் அமைந்துள்ளது.
அதன்படி, லட்சமி நாராயணன் என்கிற பக்தர் இந்த நூலினை தங்கத்தில் வடிவமைத்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தானமாக வழங்க வேண்டும் என உம்முடி பங்காரு ஜுவல்லரியை அனுகியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி உம்மடி பங்காரு ஜுவல்லரியின் பணியாளர்கள் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.
147 கிலோ எடை கொண்ட இந்த புத்தகத்தில் 522 தங்க பட்டைகள் பதிக்கப்பட்ட பக்கங்கள் உள்ளது. அதன்படி ஒவ்வொரு பக்கமும் 700 கிராம் 24 கேரட் தங்கம் பயன்படுத்தப்பட்டு ஒரு மில்லி மீட்டர் தடிமன் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நூல் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து மூன்று மாத காலம் ஆராய்ச்சிகள் நடைபெற்றது. முதல் கட்டமாக இந்த புத்தகத்தின் ஒரு பக்கம் செய்யப்பட்டு அது அயோத்தி ராமர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதியும் வாங்கப்பட்ட பின்னர் தான் முழு புத்தகம் செய்வதற்கான பணியும் தொடங்கியது.
இந்த புத்தகம் நகை செய்யும் தொழிலில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திய வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காலை 11 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உம்முடி பங்காரு ஜுவல்லரியின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் நாளை அல்லது நாளை மறுதினம் அயோத்தி ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட உள்ளது.