ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு தங்க காசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்து அசத்தியுள்ளனர். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அசத்தலான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் காவல்துறையினருடன் சேர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் புத்தாண்டு சர்ப்ரைசாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வந்த பெண்களை மொத்தமாக அழைத்து தாம்பூல தட்டில் பூக்கள், சாக்லேட் வைத்து அதனுடன் தங்கக் காசும், வெள்ளிக்காசும் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இந்த பரிசு பொருள் எப்படி உயர்ந்ததோ அதேபோல் உங்களின் உயிரும் உங்கள் குடும்பத்தினருக்கு உயர்ந்தது என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் விளக்கினார்.