ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் அரியணை யாருக்கு என அரசியல் கட்சிகள் முட்டி மோதி வருகின்றன. இந்த தேர்தல் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக, தவெக என ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான winning plan-ஐ போட்டுக்கொடுக்க 3 மாஸ்டர் மைண்ட் களை களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுக வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி தோல்வியுற்றது. இதையும் கருத்தில் கொண்டு இந்த முறை தேர்தல் வியூகங்களை பவர்ஃபுல்லாக போட்டுக்கொடுக்க வேறொரு நிறுவனத்தை திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆந்திர தேர்தலில் ஆளும் கட்சியான ysr காங்கிரஸை வீழ்த்தி சந்திரபாபு நாயுடு இமாலய வெற்றி பெற்றார். அதற்கு Showtime நிறுவனத்தின் தேர்தல் வியூகங்களே காரணம் என பெரிதும் பேசப்பட்டது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஸ்டிரா தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவுக்கு Showtime நிறுவனம் பணியாற்றியது. உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவுக்கு தான் பலம் அதிகம் என பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் ஏக்நாத் தரப்பு கெத்து காட்டியது என சொல்லலாம். இதற்கும் இந்த நிறுவனம் தான் காரணம் என சொல்லப்படுகிறது. எனவே 2026 தேர்தலுக்கு இதுவே சரியான சாய்ஸ் என முடிவு செய்த ஸ்டாலின் showtime நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்ற பெயர் வரக்கூடாது என்றால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஆக தேர்தல் பொறுப்பை சரியான கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்த ஈபிஎஸ், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. 2021 தேர்தலில் திமுகவுக்கு ஐபேக் தான் வேலை செய்தது நான் தான் கூட்டி வந்தேன் என ஆதவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற முடிவோடு சுற்றிவரும் ஆதவ் அதிமுகவுடன் இணைவார் எனவும் பேசப்பட்டது. தற்போது அவர் மூலமாகவே ஈபிஎஸ் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தூங்கிக்கொண்டிருக்கிறது ஆக்டிவ் அரசியலில் இல்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால் தற்போது அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அதிமுகவின் யார் அந்த சார் என்ற கண்டன போஸ்டர்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பேக் டூ ட்ராக் என்ற பேச்சும் வந்துள்ளது. இதற்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தான் காரனம் இந்த போராட்டத்திற்கு பின் இருக்கும் மாஸ்டர்மைண்ட் ஐபேக் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என தவெகவும் செயல்பட்டு வருகிறது. தவெகவிற்கு ஜான் ஆரோக்கியசாமி அரசியல் ஆலோசகராக செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் அரசியலில் இருந்து வரும் ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவுக்கு தேர்தல் வேலை பார்த்து ஹிட் கொடுத்தார். தற்போது விஜய்யின் செயல்பாடுகள் படு அதிரடியாக இருப்பதற்கு பேக்போனாக செயல்பட்டு வருவது ஜான் ஆரோக்கியசாமி தான் என கூறப்படுகிறது. மாநாடு ஸ்கிரிப்ட் முதல் தற்போது ஆளுநர் சந்திப்பு வரை விஜய்யை வழிநடத்துவது ஜான் ஆரோக்கியசாமி தான் என தகவல் வெளியாகியுள்ளது.