மேலும் அறிய

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!

UDISE Plus 2023-24 Report: 2024ஆம்‌ ஆண்டில்‌, பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ நிறுத்தாமல்‌, நடுநிலை- உயர்நிலை பள்ளிகளில்‌ தொடர்ந்து படிக்கும்‌ மாணவர் எண்ணிக்கையில்‌ தமிழ்நாடு மாபெரும்‌ சாதனை படைத்துள்ளது.

காலை உணவுத்‌ திட்டம்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌ திட்டம்‌ இல்லம்‌ தேடி கல்வி திட்டம்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ வாசிப்புப்‌ பழக்கத்தை வளர்க்கும்‌ திட்டம், மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ மீது தனிக்‌ கவனம்‌ செலுத்தும்‌ திட்டம்‌ முதலிய திட்டங்களால்‌ தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடும்‌ மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும்‌ சாதனை படைத்திருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியா முழுவதும்‌, 2019ஆம்‌ ஆண்டை விட, 2024ஆம்‌ ஆண்டில்‌, பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ நிறுத்தாமல்‌, நடுநிலை- உயர்நிலை பள்ளிகளில்‌ தொடர்ந்து படிக்கும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில்‌ தமிழ்நாடு மாபெரும்‌ சாதனை படைத்துள்ளது.

இடையில்‌ படிப்பை விடுவோர்‌ தமிழ்நாட்டில்‌ இல்லை

தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பில்‌ குழந்தைகளின்‌ சாதனைகள் தமிழ்நாட்டில்‌ பள்ளிப்படிப்பைத்‌ தொடங்கிய 100 சிறுவர்களில்‌ நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள்‌ 2019ல்‌ 99 பேர்‌ என்பது 2024ல்‌ 100 பேர்‌ என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர்‌ எண்ணிக்கை, 97.5ல்‌ இருந்து 100 ஆக 2024-ல்‌ அதிகரித்து இடையில்‌ படிப்பை விடுவோர்‌ தமிழ்நாட்டில்‌ இல்லை என்பது புலனாகியுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டில்‌ மேல்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த மாணவர்கள்‌ 2019-ல்‌ 81.3 என இருந்தது 2024-ல்‌ 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 89.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பீகார்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அதே நேரத்தில்‌, பீகார்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளிப்‌ படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 78.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 65 சதவிகிதமாகக்‌ குறைந்துவிட்டது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 81.1 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 65.4 சதவிகிதமாக குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.

பீகாரில்‌ மேல்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த மாணவர்கள்‌ எண்ணிக்கை 51.2 சதவிகிதம்‌ என்பது 38.8 சதவிகிதம்‌ என 12.4 சதவிகிதம்‌ குறைந்து இடையில்‌ விடுபவர்கள்‌ எண்ணிக்கை மிக மிக அதிகம்‌ என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப்‌ பொறுத்தவரையிலும்‌, மேல்நிலைப்பள்ளிப்‌ படிப்பில்‌ 2019-ல்‌ 51.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 9.3 சதவிகிதம்‌ குறைந்து அதாவது 42.3ஆக குறைந்து பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடுபவர்கள்‌ எண்ணிக்கை மிகவும்‌ அதிகரித்துள்ளது.

அசாம்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அசாம்‌ மாநிலத்தைப்‌ பொறுத்தவரை, பள்ளிப்‌படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளிப்‌ படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 93.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 82.6 சதவிகிதமாகக்‌ குறைந்துவிட்டது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 96.7 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 88.7 சதவிகிதமாகக்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.

மேல்நிலைப்பள்ளிப்‌ படிப்பைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 62.6 என்பது 2024-ல்‌ 57.4 சதவிகிதமாகவும்‌; மாணவிகள்‌ எண்ணிக்கை 64.6 சதவிகிதம்‌ என்பது 63.7 சதவிகிதமாகவும்‌ குறைந்துவிட்டது.

அரியானா மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 98.3 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 93 சதவிகிதமாகவும்‌; மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 97.7 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 95.6 சதவிகிதமாகவும்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 82.6 என்பது 2024-ல்‌ 77.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது.

ராஜஸ்தான்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

ராஜஸ்தான்‌ மாநிலத்தில்‌, பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 914.2 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 84.8 சதவிகிதமாகவும்‌; மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 90.8 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 86.6 சதவிகிதமாகவும்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 78.6 என்பது 2024-ல்‌ 72.6 சதவிகிதமாகவும்‌; மாணவிகள்‌ எண்ணிக்கை 78 சதவிகிதம்‌ என்பது 76.9 சதவிகிதமாகவும்‌ குறைந்துவிட்டது. பீகார்‌, அசாம்‌, அரியானா, ராஜஸ்தான்‌ ஆகிய மாநிலங்களில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடுவோர்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

என்னென்ன திட்டங்கள்?

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பில்‌ சேரும்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ தொடர்ந்து படிக்க வேண்டும்‌ என்பதற்காகச்‌ செயல்படுத்தி வரும்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌ திட்டம்‌, இல்லம்‌ தேடிக் கல்வி திட்டம்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌, வாசிப்புப்‌ பழக்கத்தை வளர்க்கும்‌ திட்டம்‌ மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ மீது தனி கவனம்‌ செலுத்தும்‌ திட்டம்‌, முதலிய திட்டங்களால்தான்‌ குழந்தைகள்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ இடைநிற்றல்‌ இல்லாமல்‌ தொடர்ந்து ஆர்வத்துடன்‌ படிப்பதில்‌ ஊக்கமும்‌ உற்சாகமும்‌ அடைகிறார்கள்‌ என்பது ஒன்றிய அரசின்‌ கல்வி அமைச்சக ஆய்வின்‌ மூலம்‌ தெரியவந்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget