விலை உயர்ந்த மங்களப் பொருட்கள்....தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஆயுதபூஜை சிறப்பு யாகம்..!
தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்ட தசபுஜ துர்கா மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம், வெள்ளி, பஞ்சலோகம், நவரத்தின கற்கள், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை யாகத்தில் சமர்ப்பித்து சதசண்டியாகம் நடைபெற்றது.
![விலை உயர்ந்த மங்களப் பொருட்கள்....தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஆயுதபூஜை சிறப்பு யாகம்..! Satashandi Yaga was held in Darumapuram Atheenam by offering valuable auspicious items including gold, silver, Panchaloka, Navaratna stones in Yaga. விலை உயர்ந்த மங்களப் பொருட்கள்....தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஆயுதபூஜை சிறப்பு யாகம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/04/227574dc8431c4a4ca6cdef018e2183f1664878380410186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தசரா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம். நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன.
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நிரம்பி வழிந்த பேருந்துகள், ரயில்கள்… காலியான சென்னை… இத்தனை பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனரா!
அதேபோன்று தருமபுரம் மடத்தில் பழமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜ துர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 72 -ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 26 -ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 9 -ம் நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்று. தொடர்ந்து யாகத்தில், புனித கடங்கள் வைக்கப்பட்டு நவசண்டி யாகம், நவக்கிரக யாகம் உள்ளிட்டவை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெற்றது.
அடுத்த ஆகஸ்டுக்குள் 5ஜி… பிஎஸ்என்எல் திட்டம்… 4ஜி-யே வராத நிலையில் சாத்தியமா? அமைச்சர் பதில்!
தங்கம், வெள்ளி, பஞ்சலோகம் நவரத்தின கற்கள், மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை முறத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன, நிறைவாக அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 9 -ம் நாளான இன்று நான்கு நாதஸ்வரங்கள் நான்கு மேளத்துடன் மல்லாரி இசை கச்சேரி நடைபெற்றது. பல்வேறு ராகங்களை இசைக் கலைஞர்கள் வாசித்து அம்பாளுக்கு இசை ஆலாபனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும், வீடுகளிலும் இன்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜராஜ சோழனை இந்து என்பது தமிழர் அறத்திற்கே எதிரானது’ வெற்றிமாறனுக்கு கருணாஸ் ஆதரவு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)