மேலும் அறிய
Advertisement
கடலூர் மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த ஆற்றுத்திருவிழா...குவிந்த மக்கள்..!
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தென்பெண்ணை ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
கடலூரில் தென்பெண்ணை ஆற்றுத்திருவிழாவில் சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்ந்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளே இந்த ஆற்று திருவிழா.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தென்பெண்ணை ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆற்றுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஆற்றுத் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஆற்று திருவிழாவிற்கு கடலூர், திருவந்திபுரம், திருப்பாதிரிப்புலியூர், மற்றும் மஞ்சக்குப்பம், ரெட்டி சாவடி மற்றும் புதுச்சேரி- கடலூர் எல்லையில் உள்ள கன்னியகோயில், கிருமாம்பாக்கம், மனப்பட்டு, பாகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கோவில் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. மேலும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆற்று திருவிழாவையொட்டி மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை தென்பெண்னை ஆற்று திடலில் ஏராளமான கடைகள் மற்றும் ராட்டினங்கள் போடப்பட்டுள்ளன. ஏராளமான பொதுமக்கள் தீர்த்தவாரி மற்றும் உற்சவ சிலைகளை தரிசனம் செய்து செல்கின்றனர். பாதுகாப்பிற்காக சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர், தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion