மேலும் அறிய

பழனி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா; அரோகரா கோசங்களுடன் வழிபட்ட பக்தர்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. 

பழனி முருகன் கோவில்:

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.

Tiruvannamalai Deepam: ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
பழனி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா; அரோகரா கோசங்களுடன் வழிபட்ட பக்தர்கள்

இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்த வகையில்  தற்போது கார்த்திகை தீப திருவிழாவிற்கான முக்கிய நிகழ்வு நேற்று நடைபெற்றது.

TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?

காப்பு கட்டும் நிகழ்வு:

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு  கடந்த 7ம் தேதி மாலை சாயரட்சை பூஜை முடிந்த பின் அருள்மிகு சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு தீபாராதனை காட்டபட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்த துவாரபாலகர் , மயிலுக்கு  காப்பு கட்டபட்டது. அடுத்த  7 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் பரதநாட்டியம் , திருப்பம் தரும் திருப்புகழ், அலங்காரத்தில் அழகன், பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு மலைக்கோவிலில் நடைபெறும் என அறிவிப்பின்படி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பழனி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா; அரோகரா கோசங்களுடன் வழிபட்ட பக்தர்கள்

13 ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 6 மணிக்கு மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் 13ம் தேதி மதியம் 2 மணி அளவில் மாலை 6 மணி வரைக்கும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது ,

ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!

பழனி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா; அரோகரா கோசங்களுடன் வழிபட்ட பக்தர்கள்

தீபத்திருவிழாவில் பக்தர்கள் தரிசனம்

இதனை தொடர்ந்து நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப் பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவில்  பரணி தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர். பழனி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் மாரிமுத்து தலைமையிலான கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர்.  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Embed widget