மேலும் அறிய
Advertisement
மீனாட்சி அம்மன் திருக்கோயில் உண்டியல் வருமானம்: தொகையாக எவ்வளவு? தங்கம் எவ்வளவு? தகவல் இதோ..
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்; ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரொக்க பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.
#மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானம்; ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரொக்க பணம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
— arunchinna (@arunreporter92) October 31, 2022
more details Follow @abpnadu
| #Madurai | #meenatchiamman | #temple | #MONEY | @SRajaJourno | @LPRABHAKARANPR3 | @TCAFMDU . pic.twitter.com/hmQuPFAkAl
இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களுக்கு மாதத்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இன்று எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்ற நிலையில், உண்டியல் வருமானமாக ஒரு கோடியே இருபது இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் ரொக்க பணம்(1,20,97,991) மற்றும் 0.540 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளியும் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 323 எண்ணம் ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion