1500 ஆண்டுகள் பழமையான வானமுட்டி பெருமாள் ஆலய திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு
மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்..
மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு, சனி கவசம் பாடிய, இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா- தீபத்தில் ஜொலித்த கோயில்
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஶ்ரீ தேவி, பூதேவி சமேத சீனுவாசபெருமாள் தேரில் எழுந்தருளினர். அங்கு மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து தேரானது இறுதியாக ஆலயத்தில் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அரசு நிகழ்ச்சியில் பேனா விற்ற சிறுவர்கள்; வேடிக்கை பார்த்த அதிகாரிகள் - மயிலாடுதுறை அவலம்
இதேபோன்று தினந்தோறும் இங்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற பெருமாள் வீதியுலாவில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் அண்ணவாகனத்தில் எழுந்தருளினார். வேதியர்கள் மந்திரம் முழங்க, சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்று வானமுட்டி பெருமாள் வீதியுலா சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். தொடாந்து கோயிலை வந்தடைந்த பின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Box office Collections: மாஸ் காட்டியது லால் சலாமா? லவ்வரா? - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!