வைத்தீஸ்வரன் கோயில் திருத்தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தை அடுத்து நடைபெற்ற திருதேரோட்டத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வைத்தீஸ்வரன்கோயில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆண்டு பிரமோற்சவ விழாவில் நடைபெற்ற திருதேரோட்டத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
16 ஆண்டுகள் உண்டியலில் பெற்ற தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்து எடுக்கும் பணி - பழனியில் தொடக்கம்
கோயிலின் சிறப்புகள்
இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
Panguni Uthiram 2024: கடன் தொல்லை நீங்க பங்குனி உத்திரத்தில் முருகனை எப்படி வழிபட வேண்டும்?
திருத்தேரோட்டம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த மார்ச் 15 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இவ்விழாவின் 7-ம் திருநாளான வியாழக்கிழமையான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சுவாமி, அம்பாள், செல்வமுத்துக குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள, சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுந்து தொடங்கி வைத்தனர். அதனை அடுத்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் திருத்தேரினை இழுத்தனர். தொடர்ந்து நான்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாட வீதிகளின் வழியாக சென்று கோயில் நிலையை அடைந்தது.