மேலும் அறிய

திருமணஞ்சேரி கோயில் சுற்றி நடந்த தெருவடச்சான் ஓலை சப்பர வீதியுலா

பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவமாக தெருவடச்சான் என்னும் ஓலை சப்பரம் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற, பழமையான திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத்தடை உள்ளவர்கள, நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

திருமணஞ்சேரி கோயில் சுற்றி நடந்த தெருவடச்சான் ஓலை சப்பர வீதியுலா

இத்தகைய  பல்வேறு சிறப்புகளையுடைய இந்த ஆலயத்தில் மாசிமக பெருவிழா  கடந்த 25 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சாமி புறப்பாடு வீதி உலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளான நேற்றிரவு பஞ்ச மூர்த்திகளின் தெருவடச்சான் ஒலைசப்பரங்கள் வீதியுலா நடைபெற்றது. இதனை முன்னிட்டு  கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதர் சுவாமி, சண்டிகேஸ்வரர், முருகன்,  விநாயகர், அஸ்திரதேவர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.   

Narayanan Thirupaty: ஒரு சட்டமன்ற தொகுதியை வென்று விட வேண்டும் என்ற வெறியில் திமுக செயல்படுகிறது - நாராயணன் திருப்பதி

திருமணஞ்சேரி கோயில் சுற்றி நடந்த தெருவடச்சான் ஓலை சப்பர வீதியுலா

சுவாமி அம்பாளுக்கு ஷோடச தீபாராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் தன்னைத் தானே பூஜித்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ஆலயத்தை சுற்றி வந்து சிறப்பு ஹோமம் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் தெருவடச்சான் ஓலை சப்பரங்களில் எழுந்தருளினர். மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், மூஷீச வாகனத்தில் விநாயகரும்  ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மகாதீபாரதனை நடைபெற்றது.

Pootu Muniyappan Kovil: பூட்டு போட்டு வேண்டுதல் வைத்தால் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் ஆலங்குட்டை பூட்டு முனியப்பன்

திருமணஞ்சேரி கோயில் சுற்றி நடந்த தெருவடச்சான் ஓலை சப்பர வீதியுலா

இந்த வீதியுலாவில் வானவேடிக்கை பட்டாசு முழக்கத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தெருவடச்சான் ஒலைசப்பரம் வீதியுலா நடைபெற்றது.  பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருகின்ற ஐந்தாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டமும் ஆறாம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 992 கன அடியில் இருந்து 1,223 கன அடியாக அதிகரிப்பு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Embed widget