Pootu Muniyappan Kovil: பூட்டு போட்டு வேண்டுதல் வைத்தால் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் ஆலங்குட்டை பூட்டு முனியப்பன்
பூட்டு போட்டு வேண்டுதல் வைத்தால் பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதிகம்.
சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஆலாங்குட்டை பூட்டுசாமி முனியப்பன் உள்ளது. இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. இந்த பூட்டுசாமி முனியப்பன் முதலில் எல்லையை காக்கும் தெய்வமாக விளங்கி வந்த நிலையில் முன்னோர்கள் பூட்டு போட்டு வழிபாடுகளை நடத்தி வேண்டுதல் வைத்தபோது மூன்று மாதத்திற்குள் வேண்டுதலை நிறைவேறியதால் அதன் பிறகு பூட்டு முனியப்பன் என்ற சிறப்பு பெற்றது. இந்த கோவிலுக்குள் உள்ளே நுழைந்தால் பார்த்தால் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பூட்டுகள் பூட்டப்பட்டும் மற்றும் சில பகுதியில் குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட தொட்டிககளாகவே காட்சி அளிக்கிறது.
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்பவென்றால் மாமியாருக்கு மருமகளால் பிரச்சினை என்றால் மாமியார் மருமகளின் வாயை அடைக்க பூட்டு போட்டு வேண்டுதல் வைப்பதும், மருமகளுக்கு மாமியார் பிரச்சினையாக இருந்தால் மாமியாருக்கு மருமகள் போடும் வாய் பூட்டு உள்ளிட்டவை இந்த பூட்டுசாமி முனியப்பனின் முக்கிய சிறப்பாக கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள், மாமியார் மருமகள் இடையே உள்ள கருத்து வேறுபாடு மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுதல், குடிப்பழக்கங்களில் மீண்டு வர வேண்டும் மற்றும் தொழில் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இக்கோவில் பூட்டு போட்டு வேண்டுதல் வைத்தால் பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதிகமாக உள்ளது. மேலும் வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலில் பூட்டு போட்டதை கழட்டி ஒரு தொட்டிக்குள் போட வேண்டும் என்ற சம்பர்தாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த பூட்டுசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சேவல் மற்றும் ஆடுகளை காணிக்கையாக வளர விட்டு விட்டு வேண்டுதல் நடந்துவிட்டால் சேவல், ஆடுகளை இக்கோவிலையே பலி கொடுத்து சமைத்து சாப்பிடும் நடைமுறையும் உள்ளது. ஆலங்குட்டை பூட்டு முனியப்பன் கோவில் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பூஜை பொருட்களை கோவிலில் கொடுத்தும், மேலும் நிறைய பக்தர்கள் வேண்டுதல்கள் வைத்து புதிய பூட்டுகளை பூட்டியும் மற்றும் சில பக்தர்கள் பொங்கல் வைத்து காணிக்கையாக சேவலை பூட்டு முனியப்பன் கோவிலில் நெர்ந்துவிட்டும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த கோவிலின் சிறப்புகள் குறித்து கோவில் பூசாரி அர்ஜுன் கூறுகையில், "சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆலாங்குட்டை முனியப்பன் கோவில் தற்போது ஸ்ரீ ஆலாங்குட்டை பூட்டு முனியப்பன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் முனியப்பனிடம் வைத்து பூட்டு வாங்கி கோவிலில் பூட்டிவிட்டு செல்வார்கள். பின்னர் மூன்று மாதங்களில் அவர்களின் வேண்டுதல் நிறைவேறிய பிறகு கூட்டினை கழற்றி இங்கு உள்ள தொட்டியில் வீசி விடுவார்கள். இதனால் இக்கோவிலுக்கு கூட்டு முனியப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். அதேபோன்று அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஆடி 18 ஆகிய தேதிகளில் முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அப்போது இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வார்கள். குடும்பப் பிரச்சனை தொழில் பிரச்சனை படிப்பில் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பூட்டு முனியப்பன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் வழிபட்டுச் செல்கிறனர்” எனக் கூறினார்.