மேலும் அறிய

ISKON Temple: சோழிங்கநல்லூர் இஸ்கான் கோயிலில் வெகு சிறப்பு.. கிருஷ்ண ஜெயந்தியை திருவிழாபோல் கொண்டாடும் பக்தர்கள்!

நேற்று சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மூன்று தெய்வங்களில் காக்கும் தெய்வமாக அறியப்படும் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ண அவதாரம். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்து, கிருஷ்ணராக அவர் செய்த லீலைகளும், சிறிய வயதிலேயே அவரது தாய்மாமன் கம்சனை கொன்று கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது.

அப்பேற்பட்ட கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலஷ்டமி மற்றும் ஜென்மாஷ்டமி என பல்வேறு மக்களின் நம்பிக்கையின்படி நேற்று செப்டம்பர் மாதம் 6ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.


ISKON Temple: சோழிங்கநல்லூர் இஸ்கான் கோயிலில் வெகு சிறப்பு.. கிருஷ்ண ஜெயந்தியை திருவிழாபோல் கொண்டாடும் பக்தர்கள்!

வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், நேற்று சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டப்பட்டது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”இஸ்கான் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) 7 செப்டம்பர் 2023 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை சிறப்பாகக் கொண்டாடியது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு கிருஷ்ணரின் அருளைப் பெற்றனர். நேற்று 6 செப்டம்பர் 2023: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனமும் ஆரத்தியும் இனிதே நடைபெற்றது.


ISKON Temple: சோழிங்கநல்லூர் இஸ்கான் கோயிலில் வெகு சிறப்பு.. கிருஷ்ண ஜெயந்தியை திருவிழாபோல் கொண்டாடும் பக்தர்கள்!

இன்று 7 செப்டம்பர் 2023: காலை 730 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனம் துவங்கியது. பக்தர்கள் பகவானின் திருநாமத்தை பாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. பல்வேறு கண்காட்சிகள் அனைத்து வயது பிரிவினருக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தது. பகவத் கீதை வகுப்பில் பங்கேற்பதற்கான சேர்க்கை நடைபெற்றது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் விளையாட்டுகள், வினாடிவினா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர்.” என தெரிவிக்கப்பட்டது. 


ISKON Temple: சோழிங்கநல்லூர் இஸ்கான் கோயிலில் வெகு சிறப்பு.. கிருஷ்ண ஜெயந்தியை திருவிழாபோல் கொண்டாடும் பக்தர்கள்!

நிகழ்ச்சி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா

தேதி: 7 செப்டம்பர் மற்றும் 8 செப்டம்பர் 2023, (வியாழன் மற்றும் வெள்ளி)

தரிசன நேரம்: 7 செப்டம்பர்: காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, 8 செப்டம்பர்: காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

இடம்: இஸ்கான், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோவில், பக்திவேதாந்த சுவாமி சாலை, அக்கரை, சோழிங்கநல்லூர், சென்னை-115

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஐப்பசி பௌர்ணமி: காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தங்கத் தேர் உற்சவம்!
ஐப்பசி பௌர்ணமி: காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தங்கத் தேர் உற்சவம்!
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிராம்பட்டினம் அபய வரதேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்! வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி வழிபாடு
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிராம்பட்டினம் அபய வரதேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்! வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி வழிபாடு
பௌர்ணமி நிலவொளியில் பக்திப் பரவசம்! தஞ்சை பெரிய கோவிலில் ருத்ராட்ச சிவலிங்கத்துடன் தென் கைலாய வலம்
பௌர்ணமி நிலவொளியில் பக்திப் பரவசம்! தஞ்சை பெரிய கோவிலில் ருத்ராட்ச சிவலிங்கத்துடன் தென் கைலாய வலம்
1,000 கிலோ அரிசி... 500 கிலோ காய்கறி, பழங்கள் அலங்காரம்… தஞ்சை பெருவுடையாருக்கு நடந்த பிரமாண்ட அன்னாபிஷேகம்
1,000 கிலோ அரிசி... 500 கிலோ காய்கறி, பழங்கள் அலங்காரம்… தஞ்சை பெருவுடையாருக்கு நடந்த பிரமாண்ட அன்னாபிஷேகம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Embed widget