மேலும் அறிய

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாவட்ட அகில பாரதி ஐயப்ப தர்ம பிரச்சார சபா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பாக 11ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் 18 வகையான பூக்களால் உற்சவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா நடத்தும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 11ஆம் ஆண்டு கலியுக வரதன் ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உற்சவர் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வாசவி மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ மகா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இன்று புஷ்பாஞ்ச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 18 வகையான  அரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, அரளி, ரோஸ், துளசி, செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட 18 வகையான பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் உற்சவருக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

கரூர் மாவட்ட அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா நடத்தும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பதினொன்றாம் ஆண்டு கலியுக வரதன் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் உற்சவர் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் மாவட்ட அகில பாரதி ஐயப்ப தர்ம பிரச்சார சபா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் செவ்வந்திபாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா- ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நன்னியூர் கிராமம், செவந்தி பாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், ஸ்ரீ தங்காயி, ஸ்ரீ மாசி பெரியசாமி கோவில் வீட்டு ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குட நன்னீர் நாட்டுப் பெருவிழா. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு நன்னீராட்டுப்பெருவிழா நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ பெரிய காண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செவந்தி பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஊம காளியம்மன் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

பின்னர் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா உற்சவர் சாமிக்கு புஷ்பாஞ்சலி.. 18 வகையான பூக்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

செவ்வந்திபாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன், ஸ்ரீ தங்காயி, ஸ்ரீ மாசி பெரிய சுவாமி கோவில் வீடு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை செவந்தி பாளையம் ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் காலை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்
உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்
வேலூர் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி.. என்னாச்சு?
ரயில் ஏற முயன்ற அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. என்னாச்சு?
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறைTVK Maanadu : Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்
உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பன்னுங்க..!- முதலமைச்சர் ஸ்டாலின் மோட்டிவேசன்
வேலூர் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி.. என்னாச்சு?
ரயில் ஏற முயன்ற அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. என்னாச்சு?
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
தமிழக வீரர்களின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. சுந்தர், அஸ்வின் மிரட்டல்.. 10 விக்கெட்டுகளும் காலி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
Embed widget