கனவில் வந்து சொன்ன பெருமாள்! காலணியை காணிக்கையாக செலுத்திய பக்தர்.. ஒரு ஸ்தலச்சிறப்பு
27ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
கனவில் வந்து சொன்ன கரூர் தாந்தோன்றி மலை பெருமாளுக்கு 3அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட காலணியை ஒவ்வொரு வலமாக கொண்டு வந்து காணிக்கை செலுத்தி பக்தர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் மலையோடு மலையாக தானாக தோன்றிய, தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி என்னும் குடைவரைக் கோவில் உள்ளது.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோயில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெரு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் 05.07.2022 நடைபெற உள்ளது.
புரட்டாசி பெருவிழாவில் பக்தர்கள் வேண்டுதலாக பல்வேறு பொருட்களை காணிக்கை செலுத்துகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அருகே சின்னத்தம்பிபட்டியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முன்னோர்கள் பெருமாளுக்கு காலணி செய்து அதை காணிக்கை செலுத்தி வந்துள்ளனர். இவர்களின் வகையாறாவை சேர்ந்தவர்களில் (சொப்பனம்) கனவில் தோன்றும் இறைவன் தனக்கு தேவையான காலணி இந்தளவில் செருப்பு வேண்டும் என கேட்பதாகவும் அதை செய்து காணிக்கை செலுத்துவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.
வழக்கம் போல இந்த ஆண்டு அருண்குமார் என்பவரின் கனவில் தோன்றிய இறைவன், 3 அடி நீளம், 2 அடி உயரம் அளவில் பெரிய காலணி செய்து செலுத்துமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காலணியை தயார் செய்த அவர்கள் அவர்களது கோவிலில் இரண்டு தினங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து, அங்கிருந்து வீட்டிற்கு ஒருவர் என மேளதாளங்களுடன் ஊர் ஊராக சென்று கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தவுள்ளனர்.
முன்னோர்கள் வழிபடி கனவில் வந்ததை காணிக்கை செலுத்துவது எங்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.
கரூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பூக்குடலை திருவிழா
கரூரில், இறைவனுக்கு பறித்த பூக்களை பட்டத்து யானை தட்டிவிட்டதால் கோபமுற்ற எரிபத்தநாயனார் யானையின் தும்பிக்கையை துண்டித்த ஆண்மீக வரலாற்று செயல் விளக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல்விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.
கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் வளாகத்தில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. 64-நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இறைவன் ஈசனுக்கு சாட்டுவதற்கு நந்தவனத்தில் பூக்களை பறித்து வரும் போது புகழ் சோழானின் பட்டத்து யானை மதம் பிடித்தவாறு வந்து எரிபத்த நாயனாரின் கையில் பூக்குடலையில்வைத்திருந்த பூக்களை தட்டிவிட்டது. இதனால் கோபமடைந்த எறிபத்த நாயனார் மழு எனப்படும் கோடாலியால் யானையின் தும்பிக்கையை துண்டித்தார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னன் புகழ் சோழன் இறைவனுக்கு பறித்த பூக்களை தட்டிவிட்டதால் தானே அதற்குமுழு பொறுப்பு என கூறி தனது உடைவாலை உருவி தனது தலையை துண்டிக்க கூறினார். இதனை அறிந்து அங்கு தோன்றிய இறைவன் எறிபத்த நாயனாரின் பக்தியையும், மன்னனின் எண்ண ஓட்டங்களையும் அறியவே இத்திருவிளையாடலை நடத்தியதாக கூறி யானையை உயிர்ப்பித்தார். இந்த வரலாற்று பின்னனி கொண்ட ஆன்மீக செயல் விளகத்தை தத்ரூபமாக சிவனடியார்கள் நடித்து காட்டிய இத்திருவிழாவில் ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் மற்றும் பக்தர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறைவனின் திருவிளையாடலை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்கள் பூக்குடலையில் கொண்டு வந்த பூக்களுடன் கரூர்நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் பசுபதீஸ்வரா ஆலயத்தை வந்தடைந்தனர்.