நீங்கள் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் உள்ளே..! வரதராஜ பெருமாள் கோவில் தேரை பற்றி தெரியுமா ?
kanchipuram perumal kovil ther : காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தேர் பற்றி தெரியுமா? சுமார் 79 அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்டது
பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ள கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோயில்களில் ஒன்றாக, உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வருட முழுவதும் விழாக்களால் நிறைந்த கோயிலாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 200 நாட்களுக்கு குறையாமல் உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக வைகாசி பிரம்மோற்சவம் உள்ளது. வைகாசி பிரம்மோற்சவ விழாவின் பொழுது,ஏழாவது நாள் உற்சவம் நடைபெறும் நாள் அன்று திருத்தேர் உற்சவம் விமர்சையாக நடைபெறும்.இந்த செய்தி தொகுப்பில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் திருத்தேர் தொடர்பான சுவாரசிய தகவல்களை பார்க்க உள்ளோம்.
திருத்தேர்
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் பகுதியில் 1268 ஆண்டு பிறந்தவர் ஸ்ரீ வேதாந்த தேசிகர். இராமனுசரின் தத்துவங்களைப் பரப்புவதையே முழுப்பணியாகக் கருதியவர். 101 ஆண்டுகள் வேதாந்த தேசிகர் உயிர் வாழ்ந்துள்ளார். வேதாந்த தேசிகர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பல்வேறு, பணிகளையும் மேற்கொண்டுள்ளார். அவரது வழித்தோன்றல்களில் வந்தவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரை பக்தர்களுடன் இணைந்து உருவாக்கியதாக, நம்பப்படுகிறது. தேர் உற்சவம் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது
தேரின் பிரம்மாண்டம் என்ன ?
வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேருக்கு 6 சக்கரங்கள் உள்ளன, சுமார் 65 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேராக உள்ளது. நான்கு சக்கரங்கள் இரும்பு சக்கரமாக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. சுமார் 79 அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட பெயராக உள்ளது. அகலம் சுமார் 35 அடி உள்ளது. தேர் முழுவதும் பெருமாளின் 9 அவதாரங்களும் மர சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவதைகளின் சிற்பங்கள், விநாயகர் அம்மன் போன்ற கடவுள்களின் சிற்பங்களும் தேரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில் ஒன்றாக இந்த தேர் விளங்குகிறது. இந்த தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம். தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில் பீடம் வரை மட்டுமே மரத்தால் வடிவமைக்கப்படும், அதன் பிறகு மூங்கில் அல்லது சவுக்கு கட்டைகள் மூலம் கட்டப்படும்.ஆனால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெயர் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பம்சம் ( இது போன்ற மரத்தால் கட்டமைக்கப்பட்டசிறிய தேர்கள் உள்ளன ஆனால் பெரிய தேர்களில், மரத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது காஞ்சிபுரத்தில் தான் )
1930-களில் நடந்த துயர சம்பவம்
ஒரு காலத்தில் இதைவிட பிரம்மாண்டமாகவும், உயரமாகவும் இருந்த திருத்தேர். 1930 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ( 1937 ஆண்டு நடந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர் ) தீ விபத்தில் தேர் தீயில் இருந்து நாசமாயின. திருத்தேர் பீடம் வரை அப்போது நடந்த தீ விபத்தில் எரிந்தது. அப்பொழுது இதைவிட பல அடி உயரமாகவும், தேரில் 64 கலைகளைக் குறிக்கும் வகையில் 64 கம்பங்களும் இருந்துள்ளது. அதேபோன்று அப்பொழுது இருந்த தேரில் சந்தன மரத்தில் செய்யப்பட்ட கம்பம் ஒன்று இருந்ததாகவும், திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த சந்தன மரத்தை, இழைத்தால் அடுத்த சில நாட்களுக்கு சந்தனம் வாசம் வரும். இதுவே வாசனை திரவியமாக இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் கட்டமைக்கப்பட்ட தேரில், அதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது
பெருமாள் நினைத்தால்தான்
தேரில் பெருமாள் ஒரு முறை ஏறிவிட்டால், அவர் நினைக்கும் பொழுதுதான் மீண்டும் தேர் நிலைக்கு வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் 1940-ஆம் ஆண்டு தேர்வு உற்சவத்தின்போது நடைபெற்ற ஒரு விபத்தின்பொழுது, மூன்று மாதங்கள் வரை தேர் இப்பொழுது சங்கர மடம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து "க்ரைன்" உதவியுடன் சக்கரம் பொருத்தப்பட்ட பிறகு தேர் , நிலைக்கு சென்றுள்ளது. ஒரு முறை சாமி தேரில் ஏறிவிட்டால், தேர் நிலைக்கு வரும் வரை கீழே இறங்க மாட்டார். சில நாட்கள் 10 நாட்கள் வரை ஊர்வலமாக சென்றதாக, வயதானவர்கள் தெரிவிக்கின்றனர்.