மேலும் அறிய

Bangaru Adigalar: 'பேரிழப்பு! நானும் பங்காரு அடிகளாரும் அப்பா - மகன் போல' அஞ்சலி செலுத்திய சீமான் வேதனை

பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்திய பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தின் புகழ் பெற்ற ஆன்மிகவாதிகளில் ஒருவர் பங்காரு அடிகளார். இவர் மேல்வருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் ஆன்மீக குருவாகவும் இருந்து வந்தார்.

காலமானார் பங்காரு அடிகளார்:

உலகின் பல இடங்களில் இவருக்கு பக்தர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் இவரை ஆதிபராசக்தியின் மறுவுறுவமாக வழிபட்டு வந்தனர். அதோடு இவரை “அம்மா” என்றும் அழைத்து வந்தனர். 

இச்சூழலில் தான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 19) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழிந்தார். இதனிடையே, இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தினர்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேல்வருத்தூரில் வைக்கப்பட்டுள்ள இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், இவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்டோபர் 20) அஞ்சலி செலுத்தினார்.

தனிப்பட்ட முறையில் பேரிழப்பு:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பங்காரு அடிகளாரின் இறப்பை தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாக தான் நான் பார்க்கிறேன். நாங்க ரொம்ப நெருக்கம். அப்பா - பிள்ளை போல எங்களுக்குள்ள ஒரு பாச பிணைப்பு இருந்துச்சு. அப்படிதான் நாங்க பழகுவோம். குறிப்பாக, அம்மா என் மேலே ரொம்ப அன்பா இருப்பாங்க. கர்ப்ப கிரகத்துக்குள்ள நாங்க வரக்கூடாது, கோயிலுக்குள் நாங்க எல்லாம் நுழையக் கூடாது என்றெல்லாம் இருந்த காலத்திலேயே, அதை அடித்து நொறுக்கி காட்டியவர் பங்காரு அடிகள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒருமுறை நான் அம்மா கோயிலுக்குள் போன பொழுது, அடிகளாரோட பேரன் அகத்தியன், என்னை கைய பிடிச்சு இழுத்து கர்ப்ப கிரகத்துக்குள்ள கூட்டிட்டு போய் பூஜை பண்ணுனு சொல்லிட்டான். அப்புறம் நான் தீபாராதனை காட்டி பூஜை பண்ணேன்.

சீமான் பகிர்ந்த தகவல்:

எனக்கும் அவருக்கும் இருந்த உரையாடலை சொல்றேன் கேளுங்க.டேய்.. நீ பேசி பேசியே நிறைய இளைஞர்களை உன் பக்கம் இழுத்துட்டியே டா. நான் என்னைக்காவது பேசி நீ பாத்துருக்கியா டா. நான் பேசவே மாட்டேன் டா" அப்படினு சொன்னாரு. 

அதாவது அவர் பேசாமலேயே இத்தனை லட்சம் பேரை இழுத்துருக்கேன் பாத்தியானு சொல்லாம சொன்னாரு. அவரை எல்லாம் ஆன்மிக பேரறிஞர் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இச்சூழலில், பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. தற்போது அரசு மரியாதை செலுத்து காவலர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Trump on FIFA: கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
கனடா, மெக்சிகோவை பந்தாடும் ட்ரம்ப், ஃபிபா கால்பந்து குறித்து கூறியது என்ன.?
Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..!  “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
TVK Vijay: ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் - ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”
Embed widget