கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி: இளைஞர்கள் உற்சாகம்!
ஐந்து பேர் கொண்ட குழு வழுக்கு மரத்தின் மேலே கட்டப்பட்டுள்ள ஆயிரம் ரூபாயை எடுத்து வெற்றி கண்டனர்.
மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ண அவதாரம். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணர் செய்த லீலைகளும், அவர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது. அப்பேற்பட்ட கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலஷ்டமி நேற்று செப்டம்பர் மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட்டது.
வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் கிருஷ்ணர் வீதி உலா மற்றும் உறியடிக்கும் நிகழ்ச்சி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விளையாட்டுப் போட்டிகளை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் கிருஷ்ணர் வீதி உலா மற்றும் உறியடிக்கும் நிகழ்ச்சி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, விளையாட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
— arunchinna (@arunreporter92) September 7, 2023
| @abpnadu . pic.twitter.com/zb3U4InyaX