Aadi Krithigai 2025: ஆடி கிருத்திகை! சென்னைவாசிகள் கட்டாயம் செல்ல வேண்டிய முருகன் கோயில்கள் இதுதான்!
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னைவாசிகள் கட்டாயம் செல்ல வேண்டிய முருகன் கோயில்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Chennai Murugan Temples: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆடிக்கிருத்திகை ஆகும். ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு நன்மைகள் தரும் நாளாக போற்றி வணங்கப்படும் இந்த ஆடிக்கிருத்திகை நாள் நடப்பாண்டில் இரண்டு முறை வருகிறது.
ஆடி மாதத்தில் மட்டும் நாளையும், வரும் ஆகஸ்ட் 16ம் தேதியும் கார்த்திகை நட்சத்திரம் பிறப்பதால் இந்த இரண்டு நாட்களும் ஆடிக்கிருத்திகையாகவே கருதப்படுகிறது. ஆடிக்கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் நாளை உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சென்னையில் முருக பக்தர்கள் சென்று வழிபடுவதற்கான 12 முருகன் கோயில்களை கீழே காணலாம்.
1. வடபழனி முருகன் கோயில்:
சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற முருகன் கோயில் வடபழனி முருகன் கோயில் ஆகும். இங்கு நேரில் சென்று முருகனை மனமுருகி வேண்டினால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
2. பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயில்:
பெசன்ட் நகரில் இந்த கோயில் அமைந்துள்ளது. முருகனின் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை கோயில்களும் ஒரே இடத்தில் இங்கு அமைந்துள்ளது.
3. பொன்னேரி பாலசுப்ரமணிய கோயில்:
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணிய கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இந்த கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கினால் தலையெழுத்து மாறும் என்பது நம்பிக்கை.
4. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயில்:
மிகவும் புகழ்பெற்ற கோயில் சிறுவாபுரி முருகன் கோயில். இங்கு சென்று முருகனை வணங்கினால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
5. குரோம்பேட்டை குமரன்குன்றம்:
குரோம்பேட்டையில் அமைந்துள்ளது குமரன்குன்றம் கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு நிகரான கோயில் இந்த கோயில் ஆகும்.
6. திருப்போரூர் கந்தசாமி கோயில்:
திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலான கந்தசாமி கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கினால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
7. குன்றத்தூர் சுப்ரமணியசுவாமி கோயில்:
குன்றத்தூர் முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில் ஆகும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு நிகரான கோயில் இந்த கோயில் ஆகும். இங்கு சென்று முருகனை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும்.
8. நெசப்பாக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில்:
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. திருச்செந்தூர் முருகன் பெயரிலே நெசப்பாக்கத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.
9. கந்தகோட்டம் முருகன் கோயில்:
சென்னை பூங்காநகரில் அமைந்துள்ளது கந்தகோட்டம் முருகன் கோயில். இந்த கோயில் முருகனே விரும்பி வந்து ஆலயம் கொண்ட தலம் என்று கோயில் வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் வணங்கினால் மன நிம்மதி உண்டாகும்.
10. அச்சரப்பாக்கம் முருகன் கோயில்:
மேல்மருவத்தூர் அருகே அமைந்துள்ளது அச்சரப்பாக்கம். இங்கு அமைந்துள்ள அச்சரப்பாக்கம் முருகன் கோயில் பழனிக்கு நிகரான கோயில் ஆகும். இங்கு 45 அடி உயர முருகன் சிலை அமைந்துள்ளது.
11. வல்லக்கோட்டை முருகன் கோயில்:
தாம்பரம், படப்பை அருகே அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில். இந்த கோயில் புகழ்பெற்ற முருகன் கோயில். இங்கு சென்று முருகனை வணங்கினால் குழந்தைப் பேறு உண்டாகும். திருமணத் தடை நீங்கும்.





















