Karthigai Month: பிரச்னைகள் தீரும்.. கார்த்திகை மாதம் ஒரே ஒருநாள் இந்த தீபம் ஏத்துங்க!
வீட்டைப் பொறுத்தவரை இந்த 365 திரி நூலை வீட்டின் பூஜையறை, ஹாலின் நடுப்பகுதி, மெயின் வாசல் பக்கத்தில் ஏற்றலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையால் விளக்கேற்றும் நேரம் என்பது மாறி விட்டது.

இந்து மதத்தில் கார்த்திகை மாதம் மிகுந்த விஷேசம் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியான இந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளாவது நாம் ஏற்றி வழிபட வேண்டிய தீபம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நாமும், நம்முடைய குடும்பத்தினரும் பலவிதமான பலன்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். குடும்பத்தினருக்கு ஏற்படக்கூடிய அனைத்து தோஷங்களும் விலகும். மற்ற மாதங்களில் இல்லாமல் கார்த்திகை மாதத்தில் ஏன் இந்த தீபத்தை ஏற்றுகிறோம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்த மாதத்தில் தான் சிவபெருமான் ஜோதி வடிவமாக பிரம்மன், விஷ்ணு, முப்பது கோடி தேவர்களுக்கு காட்சியளித்தார். அப்படியான இந்த புனித மாதத்தில் 365 நூல்கள் கொண்ட தீபத்தை நாம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்ற கார்த்திகை மாதத்தில் முக்கியமான நாள் இருக்கிறதா என்றால் அது திருக்கார்த்திகை நாள் தான். அன்று வீட்டிலோ அல்லது கோயிலிலோ இந்த தீபத்தை ஏற்றலாம். ஒருவேளை அன்று முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்கிழமை ஏற்றலாம். அன்றைய நாளில் மது, மாமிசம் போன்றவை தொடக்கூடாது. காரணம் இது ஒரு யாகம் நடத்துவதற்கு சமமானது. இது பல கோடி புண்ணியங்களை நமக்கு தரும். இந்த திரி நூல் வீட்டின் அருகில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.
வீட்டைப் பொறுத்தவரை இந்த 365 திரி நூலை வீட்டின் பூஜையறை, ஹாலின் நடுப்பகுதி, மெயின் வாசல் பக்கத்தில் ஏற்றலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையால் விளக்கேற்றும் நேரம் என்பது மாறி விட்டது. ஆனால் வீடு என்றால் நிச்சயம் தினமும் காலை அல்லது மாலை வேளையில் விளக்கேற்ற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தோஷம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இந்த 365 திரி நூலை நாம் ஏற்றினாலும் வருடம் முழுவதும் தீபமேற்றிய பலன்கள் கிடைக்கும். இது சிவ - பார்வதி தீபம் என அழைக்கப்படுகிறது. இதனை ஏற்றுவதால் வீட்டின் பிரச்னைகள் அனைத்தும் தீரும். சிவனை வணங்கினால் கார்த்திகை சோமவாரம் திங்கட்கிழமையும், முருகனை வழிபடுபவர்கள் செவ்வாய்கிழமையும், அம்மனை வணங்குபவர்கள் வெள்ளிக்கிழமையும் ஏற்றலாம்.
இந்த திரி விளக்கை ஏற்ற நிறைய எண்ணெய் தேவைப்படும். பசு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். இதை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். விளக்கு வைக்கும் இடத்தில் ஒரு கோலமிட்டு ஒரு தட்டில் விளக்கை வைத்து சுற்றிலும் பூக்கள் வைத்து அலங்கரிக்கலாம். அப்போது குங்குமம், பூக்கள், திருநீறு கொண்டு இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு நாம் அர்ச்சனை செய்யலாம். எனவே இந்த மாதத்தில் இந்த தீபத்தை ஏற்றி பலன்களைப் பெறுங்கள்.





















