Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Kerala Pooja Bumper Lottery 2025: பூஜா பம்ப்பர் BR-106 லாட்டரியில் 12 கோடி ரூபாய் முதல் பரிசு அளிக்கப்பட உள்ளது.

கேரள லாட்டரி துறை சார்பில் நடத்தப்படும் பூஜா பம்ப்பர் லாட்டரி குலுக்கல் இன்று (நவ.22) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. அதுவரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று லாட்டரி துறை அறிவித்த நிலையில், டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் விற்கப்பட்டு வருகின்றன.
பூஜா பம்ப்பர் (Pooja Bumper Lottery) BR-106 லாட்டரியில் 12 கோடி ரூபாய் முதல் பரிசு அளிக்கப்பட உள்ளது. இதற்கான விற்பனை அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. ஒரு டிக்கெட்டின் விலை 300 ரூபாய் ஆகும்.
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூஜா பம்ப்பர் லாட்டரி டிக்கெட், மொத்தம் 5 சீரிஸ்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டிக்கெட்டை பெறுவது எப்படி?
கேரள லாட்டரி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்க முடியாது. ஆஃப்லைனில் கேரள மாநிலத்தில் மட்டுமே வாங்க முடியும்.
பரிசு விவரம்
பூஜா பம்ப்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசுக்கு ரூ.12 கோடி அளிக்கப்பட உள்ளது.
இரண்டாவது பரிசு: ரூ.1 கோடி பரிசு (5 பேருக்கு)
மூன்றாவது பரிசு: ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு)
ஆறுதல் பரிசு: ரூ.1 லட்சம் (4 டிக்கெட்டுகளுக்கு)
நான்காம் பரிசு: ரூ.3 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு)
ஐந்தாம் பரிசு: ரூ.2 லட்சம் (தலா 5 டிக்கெட்டுகளுக்கு) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் பரிசு: ரூ.5 ஆயிரம் (தலா 24 டிக்கெட்டுகளுக்கு)
7ஆம் பரிசு: ரூ.1 ஆயிரம் (தலா 222 டிக்கெட்டுகளுக்கு)
8ஆம் பரிசு: ரூ.500 (தலா 370 டிக்கெட்டுகளுக்கு)
9ஆம் பரிசு: ரூ.300 (தலா 340 டிக்கெட்டுகளுக்கு)
திருவோணம் பம்ப்பர்
முன்னதாக திருவோணம் பம்ப்பர் லாட்டரி குலுக்கல் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து கன மழை, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 4-ம் தேதி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















