மேலும் அறிய
DC vs CSK : இக்கட்டான சூழலில் தத்தளிக்கும் சிங்கங்கள்...ப்ளே-ஆஃபில் நுழையுமா சென்னை அணி?
ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் - சி.எஸ்.கே
1/6

16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது.
2/6

இந்நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தை ஆட உள்ளது.
3/6

ஏற்கனவே ப்ளே-ஆஃப் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ள நிலையில் சென்னை அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
4/6

இதுவரை நடந்த போட்டிகளில் குஜராத் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
5/6

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை அணி ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதி பெறும். வெற்றி பெறாவிடில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
6/6

டெல்லி அணியின் மோசமான ஃபார்மை உபயோகித்து சென்னை அணி வெற்றி பெற சென்னை ரசிகர்கள் ஆவலோடு இருகின்றனர். மேலும், டெல்லி அணி தனது ஹோம் க்ரௌண்ட் ஆன அருண் ஜெட்லி மைதானத்தில் மோசமான ரெக்கார்டை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 May 2023 02:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion