ஐ.பி.எல். தொடரின் 41-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்குநேர் மோதின. இரு அணிகளும் இது வாழ்வா? சாவா? போட்டி என்பதால், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்கின.
2/6
மார்க்கரம் - ஹுடா இணை களத்தில் நின்று நிதானமாக ரன் சேர்த்தது. 50 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள், பஞ்சாப் அணியின் ஸ்கோரை 100-ஐ தொட வைத்தனர்.
3/6
டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
4/6
குறைவான ஸ்கோர் என்பதால், அதிரடியான பேட்டிங் லைன் -அப் வைத்திருக்கும் மும்பை அணி, போட்டியை எளிதில் வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், டஃப் கொடுத்த பஞ்சாப் அணி பெளலர்கள் போட்டியின் 4வது ஓவரிலேயே ரோஹித் ஷர்மா (8), சூர்யகுமார் யாதவ் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் வேகத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டனர்.
5/6
சவுரப் திவாரி இன்றைய போட்டியில் மும்பை வெற்றி பெற முக்கிய காரணமானார். 45 ரன்கள் எடுத்த அவர், மும்பை அணி 92 ரன்கள் எடுக்கும் வரை களத்தில் நின்றார்.
6/6
கள் எடுத்த அவர், மும்பை அணி 92 ரன்கள் எடுக்கும் வரை களத்தில் நின்றார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்டிக், பொல்லார்டு வழக்கம் போல அதிரடி காட்டி போட்டியை முடித்து வைத்தனர். கடைசி ஓவர்களில், பஞ்சாப் அணியின் சொதப்பல் ஃபீல்டிங் மும்பை அணியின் வெற்றிக்கு சாதகமானது. 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது மும்பை அணி.