மேலும் அறிய
Advertisement

ZIM vs SCO: ஜிம்பாப்வேயின் உலக கோப்பை கனவை சிதைத்த ஸ்காட்லாந்து அணி!
ZIM vs SCO : நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது

ஸ்காட்லாந்து அணி
1/6

உலக கோப்பைக்கான சூப்பர் சிக்ஸ் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் பலப்பரிச்சை நடத்தியது ஜிம்பாப்வே. இதில் முதலில் பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து.
2/6

கிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ கிராஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
3/6

பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் மைக்கல் லீஸ்க் மட்டும் நிதானமாக ஆடி அணிக்காக ரன்களை சேர்த்தார். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.
4/6

இந்த போட்டியில் வென்றால் உலக கோப்பைக்கு தகுதி ஆகிவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் கனவு கோட்டையை சுக்கு நூறாக உடைத்தது ஸ்காட்லாந்து அணி.
5/6

போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே 4 விக்கெட்டுகளை அடுத்து அடுத்து இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே. பின்னர் வந்த ரியான் பர்ல்,வெஸ்லி மாதேவர் ஆகியோர் அணியை வெற்றி பாதையை நோக்கி இழுத்து சென்றார்.
6/6

41.1 ஓவரில் ஜிம்பாப்வே அணி 203 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் சூப்பர் சிக்ஸ் நடந்த இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று உலக கோப்பை போட்டிக்கும் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்காட்லாந்து.
Published at : 05 Jul 2023 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion