மேலும் அறிய
Yashasvi Jaiswal : சதம் அடித்த பிறகு உருக்கமாக பேசிய இளம் வீரர் யஷவி ஜெய்ஷ்வால்!
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதம் அடித்து அசத்தினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
1/6

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகள் விளையாட உள்ளன.
2/6

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா , யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடி வந்தனர்.
3/6

இரண்டாம் நாளான நேற்று இருவரும் சதம் அடித்து அசத்தினார். பின்னர் ரோஹித் ஷர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
4/6

இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
5/6

ஆட்டம் முடிந்த பின் பேசிய ஜெய்ஷ்வால், “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் ஆரம்ப காலம். அதனால் நான் மிகவும் கவனமாகவும், பொருப்புடனும் விளையாட நினைக்கிறேன். நான் இன்னும் களத்தில் இருப்பதால் மூன்றாவது நாளும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.
6/6

மேலும் பேசிய அவர் “பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நான் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் நிறைய பேசினேன், ஆவர் இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு கூறிக்கொண்டே இருந்தார்” என்று கூறினார்
Published at : 14 Jul 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement