மேலும் அறிய
IND W vs WI W: ஒரே போட்டியில் இரண்டு சதங்கள்... தெறிக்கவிட்ட ஸ்மிரிதி, ஹர்மன்!

ஸ்மிரிதி மந்தானா, ஹர்மன் ப்ரீத் கவுர்
1/7

மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
2/7

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது.
3/7

மூன்றாவது போட்டியில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
4/7

இந்த போட்டியில், இந்திய பேட்டர்கள் சொதப்பிய நிலையில் ஓப்பனர் ஸ்மிரிதி சுதாரித்து கொண்டு ஆடினார். 100 ரன்கள் எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது.
5/7

ஸ்மிரிதி மட்டும் ரன் சேர்த்து கொண்டிருக்க, அடுத்து களமிறங்கிய ஹர்மனும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் 123 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிரிதி அவுட்டாகி வெளியேறினார். 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அசத்தினார் ஸ்மிரிதி.
6/7

தொடர்ந்து விளையாடிய ஹர்மன் ப்ரீத்கவுர் 109 ரன்கள் எடுத்தார். இவர் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
7/7

ஸ்மிரிதி, ஹர்மனின் 184 ரன் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இதனால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளுக்கு 317 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய மகளிர் அணி.
Published at : 12 Mar 2022 10:50 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion